[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

ராஜுவ் கொலை வழக்கில் மறைக்கப்பட்ட உண்மைகள்.. நளினியின் புத்தகம் நாளை வெளியாகிறது..!

nalini-written-book-about-rajiv-gandhi-murder-case

ராஜுவ் கொலைவழக்கில் தண்டனைப்பெற்று சிறையில் உள்ள நளினி எழுதியுள்ள புத்தகம் நாளை வெளியாகவுள்ளது.

‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்தப்புத்தகத்தில் பல திடுக்கிடும் தகவல்களை நளினி கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் உள்ள நளினி ராஜீவ் காந்தியின் கொலை குறித்து புத்தகம் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா தன்னை சிறையில் வந்து சந்தித்தது குறித்தும் அப்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்தும் நளினி எழுதியிருக்கிறார்.

இந்த புத்தகத்தில், சிறையில் பிரியங்காவை சந்தித்தது தனது வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வு என்றும், இந்த சந்திப்பு முடிந்து பிரியங்கா டெல்லி சென்ற தகவல் கிடைக்கும் வரை நளினி உணவு உண்ணாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி படுகொலை குறித்து தனக்கு முன்கூட்டியே எதுவும் தெரியாது என்றும் அதில் நளினி தெரிவித்துள்ளார்.

நளினியின் இந்த புத்தகம், ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் இதுவரை வெளிவராத பல்வேறு உண்மைகளை வெளியே கொண்டுவர வாய்ப்பு இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close