[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

மூன்று தொகுதிகளையும் மொத்தமாக அள்ளிய அதிமுக..!

admk-seals-in-3-constituency-in-tamilnadu

தமிழகத்தில் 3 தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் 3 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரான கே.சி.பழனிச்சாமியை விட 23,673 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பதிவான மொத்த வாக்குகளில் செந்தில்பாலாஜி 88,068 வாக்குகளும், திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி 64,395 வாக்குகளும் பெற்றனர்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரான மருத்துவர் சரவணனை விட 42,670 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மொத்தமாக ஏ.கே.போஸ் 1,13,032 வாக்குகளும், சரவணன் 70,362 வாக்குகளும் பெற்றனர்.

தஞ்சை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரான அஞ்சுகம் பூபதியை விட 27,478 வாக்குகள் அதிகம் பெற்றார். பதிவான மொத்த வாக்குகளில் ரங்கசாமி 1,02,062 வாக்குகளும், திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி 74,584 வாக்குகளும் பெற்றனர்.

தமிழகத்தில் 3 தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சி தொண்டர்கள் இதனை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தற்போது சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் பலம் 136 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close