[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

தொல்.திருமாவளவனுடன் பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு

pon-radhakrishnan-meets-thol-thirumavalavan

மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை திடீரென சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சென்னை அசோக் நகரில் உள்ள, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் திருமாவளவனை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று திடீரென சந்தித்து பேசினார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது.

இதற்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசுகையில், இது மரியயாதை நிமித்தமான சந்திப்பு எனவும் இதில் அரசியல் எதுவும் பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நவம்பர் மாதம் 19-ஆம் தேதி தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. மக்கள் நலக் கூட்டணியில், மதிமுக, இடதுசாரிகள் ஆகியவற்றோடு, விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொல்.திருமாவளவனை திடீரென சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியல் நிகழ்வுகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close