[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

ரஹானேவுக்கு பெண் குழந்தை - புகைப்படம் வெளியீடு

ajinkya-rahane-introduces-new-born-daughter-picture

இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானேவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் விளையாடி வருபவர் ரஹானே. சின்ன ராகுல் டிராவிட் என அழைக்கப்படும் இவர், பேட்டிங்கில் ஏற்பட்ட தடுமாற்றத்தால் சில காலம் இந்திய அணியில் இடம்பெறமால் இருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி இவருக்கு உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்கப்படவில்லை. 

இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் ரஹானேவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரஹானே விளையாடி வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ரஹானேவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது குழந்தையுடன் இருக்கும் மனைவியும் தானும் இருக்கும் புகைப்படத்தை ரஹானே ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதனை பலரும் பகிர்ந்து, அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close