[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

தொடரை கைப்பற்றுமா இந்தியா? - இன்று ஒருநாள் இறுதி போட்டி

india-vs-west-indies-3rd-odi-today

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 3 ஆவது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெறவுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவருகிறது. இந்தத் தொடரில் முதலில் நடைபெற்ற டி20 போட்டிகளில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றது. 


இந்நிலையில் இந்த இரு அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. ட்ரினிடாட்டில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது. ஏற்கெனவே இரண்டாவது ஒருநாள் போட்டியை வென்ற இந்திய அணி இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிப் பெற்று தொடரை கைப்பெற்றும் முனைப்பில் உள்ளது. அதேசமயம் இப் போட்டியில் வென்று ஒருநாள் தொடரை சமனில் முடிக்க வெஸ்ட் இண்டீஸ் போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close