[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

இதெல்லாம் நடந்தால் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு!

qualification-scenarios-mission-impossible-for-pakistan

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி போட்டியில் பாகிஸ்தானுக்கான வாய்ப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் அரையிறுதிக்கான இடத்தை முதல் அணியாக, ஆஸ்தி ரேலியா கைப்பற்றியது. அடுத்து, இந்திய அணி பிடித்தது. நேற்று நடந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி அரை இறுதி க்குச் சென்றுவிட்டது. நான்காவது இடத்துக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.. 

பாகிஸ்தான் அணி, தனது கடைசி லீக் போட்டியில் பங்களாதேஷை நாளை சந்திக்கிறது. இதில் பாகிஸ்தான் அணி வென்றால், தற்போது 9 புள்ளிகளில் இருக்கும் அந்த அணி, 11 புள்ளிகளை பெறும். நியூசிலாந்து அணி ஏற்கனவே 11 புள்ளிகளுடன் இருப்பதால் இரு அணிகளும் சம நிலையில் இருக்கும். இதனால், ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி அரை இறுதிக்குச் செல்லும். அதனடிப்படையில், நியூசிலாந்து அணி ரன் ரேட்டில் (+0.175) சிறப்பாக இருப்பதால் அந்த அணிக்கே வாய்ப்பு கிடைக்கும். 

குறைவான ரன் ரேட்டில் (-0.792) உள்ள பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு நுழைய வேண்டும் என்றால் பங்களாதேஷூக்கு எதிராக மெகா வெற்றி பெற வேண்டும். அதாவது பாகிஸ்தான் முதலில் பேட் செய்து, 400 ரன்கள் எடுக்க வேண்டும். பங்களாதேஷை 316 ரன் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். 350 ரன்கள் குவித்தால், பங்களாதேஷை 38 ரன்னில் சுருட்ட வேண்டும். இந்த மேஜிக் நடக்க வாய்ப்பில்லை. அதோடு, பாகிஸ்தான் 2-வது பேட்டிங் செய்தாலும் வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதனால், நியூசிலாந்து அணி அரைஇறுதிக்கு தகுதிபெறுவது உறுதி என்கிறார்கள். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close