[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

“பேட்ஸ்மேன்களை தாக்குவது எங்கள் நோக்கம் இல்லை” - பும்ரா 

bumrah-speech-about-vijay-sankar

பேட்ஸ்மேன்களை தாக்குவது எங்கள் நோக்கம் இல்லை எனவும் ஆனால் சில சமயங்களில் இதுபோன்று நடக்கத்தான் செய்யும் எனவும் பந்துவீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார். 

ஷிகர் தவானுக்கு பெருவிரல் எலும்பு முறிவால் ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ரிஷ்ப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து தசைப்பிடிப்பால் புவனேஷ்வர் குமார் 3 போட்டிகளில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தியாவுக்கு அடுத்த சோதனையாக அமைந்தது பும்ரா வீசிய பந்து. அதாவது நாளை உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இதற்கான வலைப்பயிற்சியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். 

அப்போது பும்ரா பந்துவீச விஜய் சங்கர் பேட்டிங் செய்தார். அப்போது பும்ரா வீசிய யார்க்கர் பந்து விஜய் சங்கரின் கணுக்காலில் பட்டது. இதில் வலி தாங்க முடியாமல் விஜய் சங்கர் வலியால் துடித்தார். இதையடுத்து விஜய்சங்கருக்கு முதலுதவி தரப்பட்டது. 

இந்நிலையில் இதுகுறித்து பும்ரா கூறுகையில், “பேட்ஸ்மேன்களை தாக்குவது எங்கள் நோக்கம் இல்லை. ஆனால் சில சமயங்களில் இதுபோன்று நடக்கத்தான் செய்யும். இது எதிர்பாராதவிதமாக நடைபெற்ற ஒன்று. விஜய் சங்கருக்கு அடிபட்டது துருதிஷ்டவசமானது. சிறப்பாக விளையாட வேண்டுமென்றால் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுதான் ஆகவேண்டும். இப்போது விஜய் சங்கர் நலமாக உள்ளார். 

அதேபோல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தவான் நன்றாக விளையாடினார். அவருக்கு காயம் ஏற்பட்டது வருத்தமாக உள்ளது. தவான் விலகல் குறித்து கவலைபடாமல் இதில் இருந்து இந்தியா மீண்டு வரும்” எனத் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close