[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • BREAKING-NEWS தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்
  • BREAKING-NEWS வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

’அதெல்லாம் சரி, வானிலை எங்க கையில் இல்லையே...’ விராத் பேட்டி

win-or-lose-world-cup-won-t-end-with-sunday-s-game-virat-kohli-on-pakistan-clash

’’எந்த பந்துவீச்சாளரை எதிர்கொண்டாலும் அது சிவப்பு பந்தா, வெள்ளை பந்தா என்பதை மட்டுமே பார்க்கிறேன்’’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி சொன்னார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அவரிடம் பாகிஸ்தான் போட்டி மீதான எதிர்பார்ப்பு, நெருக்கடி பற்றி ஒரே மாதிரி ஆறு, ஏழு கேள்விகள் கேட்கப்பட்டன. 

அதற்கு விராத் கோலி பதிலளிக்கும்போது, ’’இந்தப் போட்டி குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி குறிப்பிட்ட நேரத்தில் முடிந்துவிடும். சிறப்பாக ஆடினாலும் இல்லையென்றாலும் இத்துடன் உலக கோப்பை போட்டி முடிந்து விடாது. பிறகும் போட்டிகள் இருக்கின்றன. மற்ற ஆட்டங்களை விட இது சிறப்பு வாய்ந்த அல்லது முக்கியத்துவம் வாய்ந்த போட்டி என்று எதுவும் இல்லை. எந்த அணி என்றாலும் ஒரே மாதிரியாக கவனம் செலுத்துகிறோம். அணியில் இருக்கிற 11 பேரும் பொறுப்பை பகிர்ந்துகொள்கிறோம். மனரீதியாக எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். இருந்தாலும் வானிலை யார் கையிலும் இல்லை’’ என்றார்.

பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிருக்கும் உங்களுக்குமான மோதல் எப்படியிருக்கும் என்று ஒரு செய்தியாளர் கேட்டார். 

அதற்கு பதிலளித்த விராத், ’’உங்கள் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்கவோ, பரபரப்புக்காகவோ எதையும் சொல்ல முடியாது. நான் எந்த பந்துவீச்சாளரை எதிர்கொண்டாலும் அது சிவப்பு பந்தா, வெள்ளை பந்தா என்பதை மட்டுமே பார்க்கிறேன். பந்துவீச்சாளரின் திறமையை மதிக்கிறோம். ரபாடா பற்றியும் இதையே சொன்னேன்.

ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள், மற்றொரு கிரிக்கெட் போட்டி என்ற நிலையிலேயே இதை பாருங்கள். இது சிறப்பு வாய்ந்த அல்லது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டம் என்று எங்களுக்கு எதுவும் இல்லை. அனைத்து போட்டியையும் ஒன்றாகத்தான் பார்க்கிறோம்’’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close