[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

‘அதிக குறைகளுடன் விளையாடினோம்’ - தோனி சொன்னதன் பின்னணி ?

ms-dhoni-talked-about-csk-middle-order-batsmen-poor-performance-in-this-ipl

நடப்பு ஐபிஎல் தொடரில் தொடக்கம் முதலே அதிக வெற்றிகளை பெற்று வந்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ்தான். ஆனால், லீக் போட்டிகளில் கடைசி கட்டத்தில் அதிக தோல்விகளை அடைந்தது. இருப்பினும், பிளே ஆஃப் சுற்றுக்கு இரண்டாவது அணியாக தகுதி பெற்றது. மும்பை அணியிடம் தோற்று, பின்னர் டெல்லி அணியிடம் வெற்றி பெற்று இறுதியில் பைனலுக்கு தகுதி பெற்றது சென்னை அணி. 

ஆனால், ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி மும்பையிடம் தோல்வியை தழுவியது. தோல்விக்கு பின்னர் பேசிய கேப்டன் தோனி, “இந்த ஐபிஎல் தொடரில் அவ்வளவு முழுமையாக செயல்படவில்லை. பந்துவீச்சில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்டோம். ஆனால், பேட்டிங்கில் மிடில் ஆர்டர் சிறப்பாக ஆடவில்லை” என்று வெளிப்படையாகவே கூறினார். 

          

ஆமாம், தோனி சொன்னது நூறு சதவீதம் உண்மைதான். சென்னை அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக ரெய்னா, அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், தோனி ஆகிய நான்கு பேர் உள்ளனர். இதில், தோனி மட்டுமே பெரும்பான்மையான போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். மற்றவர்கள் பெரும்பாலான போட்டிகளில் சொதப்பி, சில போட்டிகளில் மட்டுமே நன்றாக விளையாடினர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரரான சுரேஷ் ரெய்னா 17 போட்டிகளில் விளையாடி 383 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 3 அரைசதம் அடித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 59 ரன். இவரது பேட்டிங் சராசரி வெறும் 23.94 ரன்கள் தான். இந்த தொடரில் ரெய்னா மொத்தமே 9 சிக்ஸர்கள் தான் அடித்துள்ளார்.

            

அதேபோல், ஆரம்பக்கால லீக் போட்டிகளில் தொடக்கவீரராக களமிறங்கி பின்னர் மிடில் ஆர்டருக்கு மற்றப்பட்ட அம்பத்தி ராயுடுவும் ரசிகர்கள் கடுப்பாகும் அளவிற்கு விளையாடினார். இவர் 17 போட்டிகளில் விளையாடி 282 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரே ஒரு அரைசதம் அடித்த அவரது பேட்டிங் சராசரி 23.50 ரன்கள்தான். 

சென்னை அணியின் ஆல்ரவுண்டரான கேதர் ஜாதவ் தொடக்கத்தில் சில போட்டிகளில் நன்றாக விளையாடினார். ஆனால், பின்னர் அவரது பேட்டிங் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. 14 போட்டிகளில் 12 இன்னிங்சில் பேட்டிங் செய்த கேதர் 162 ரன்கள் எடுத்துள்ளார். ஒரே ஒரு அரைசதம் அடித்த அவரது பேட்டிங் சராசரி 18 ரன்கள் தான். 

             

சென்னை அணியில் மற்ற ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா 106, பிராவோ 80 ரன்கள் எடுத்தனர். இதில், பிராவோ பெரிதாக ஒரு போட்டியில் கூட ஜொலிக்கவில்லை. ஆனால், ஜடேஜா சில போட்டிகளில் முக்கியமான ரன்களை எடுத்தார். இவரது பேட்டிங் சராசரி 35.33 ரன்கள். 

          

சென்னை அணியின் பேட்டிங்கில் டாப்பில் உள்ளவர் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் 12 இன்னிங்சில் விளையாடி 416 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 84* ரன்கள். பேட்டிங் சராசரி 83.20 ரன். இந்த தொடரில் மொத்தம் 23 சிக்ஸர் விளாசியுள்ளார். மூன்று அரைசதம் அடித்துள்ளார். 7 முறை நாட் அவுட் ஆகியுள்ளார். 

           

சென்னை அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை இம்ரான் தாஹிர் 26 விக்கெட் சாய்த்தார். இதுதான் இந்த ஐபிஎல் தொடரில் தனி நபரில் அதிக விக்கெட் ஆகும். பவுலிங் ரன் சராசரி 6.70 தான். அடுத்ததாக, வேகப்பந்துவீச்சாளர் சாஹர் 22 விக்கெட் எடுத்துள்ளார். இவரது பந்துவீச்சும் தொடர் முழுவதும் சிறப்பாக அமைந்தது. அதேபோல், ஹர்பஜன் சிங் 16, ஜடேஜா 15 விக்கெட் எடுத்தனர். இருவருமே சென்னை அணிக்கு தூணாகவே இருந்தனர். சுழற்பந்துவீச்சில் மூவருமே பல போட்டிகளில் வெற்றிக்கு காரணமாக இருந்தனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close