[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

“கெத்தா நடந்து வரான்..கேட்டையெல்லாம் கடந்து வரான்” - விவாதத்தை கிளப்பிய ‘ஹாட்’ தோனி

unlike-captain-cool-ms-dhoni-slammed-for-confronting-umpire-after-no-ball-controversy

மைதானத்திற்குள் வந்தது சரியா? தவறா? என ஒரு பக்கம் கடுமையான விவாதம் நடந்து கொண்டிருக்க, போட்டி முடிந்ததில் இருந்து தோனியின் செயலை அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தார்கள்.

ஐபிஎல் போட்டிகள் என்றாலே சுவாரஸ்யங்களுக்கு பஞ்சம் இருக்காது. பெரும்பாலான போட்டிகளில் இறுதி கட்டத்தில் பரபரப்பு இருக்கும். அப்படியொரு போட்டிதான் சென்னை சூப்பர்ஸ் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று நடந்தது. நேற்றைய போட்டியின் கடைசி ஓவரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. ஒரு கேப்டனாக 100வது வெற்றி என்ற பெருமையை தாண்டி, தோனியின் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றிலே இது ஒரு வித்தியாசமான போட்டியாக மாறிவிட்டது. 

                 

152 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை. களத்தில் தோனியும், ஜடேஜாவும் இருக்கிறார்கள். முதல் பந்திலே சிக்ஸர் அடித்தார் ஜடேஜா. அதில் என்ன விநோதம் என்றால், பந்துவீசிய ஸ்டோக்ஸும் தவறி விழுந்துவிட்டார். ஜடேஜாவும் பந்தை அடித்துவிட்டு அப்படியே தரையில் விழுந்துவிட்டார். ரன்னர் திசையில் இருந்து ஓடிவந்த தோனி, ‘ஓடுப்பா..ஓடு..’ கத்தினார். ஆனால், ஜடேஜாவால் எழ முடியவில்லை.

           

பந்து சிக்ஸர் சென்றதை பார்த்த தோனி, ஜடேஜாவின் ஹெல்மெட்டில் தன்னுடைய பேட்டால் நகைச்சுவையாக அடித்தார். மூன்றாவது பந்தில் தோனி ஆட்டமிழக்க, சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அடுத்த மூன்று பந்துகளில் 8 ரன்கள் தேவை.

            

4வது பந்தினை ஸ்டோக்ஸ் புல்டாசாக வீசினார். அது, பேட்டிங் செய்த சண்ட்னெரின் இடுப்புக்கு மேலே சென்றது. அதனால், நடுவர் நோ பால் என அறிவித்தார். ஆனால், லெக் திசையில் இருந்த நடுவர் இல்லை என்று மறுக்கவே ‘நோ பால்’ முடிவை திரும்ப பெற்றார். இதனால், போட்டியின் நடுவே லேசான குழப்பம் நிலவியது. நடுவர்களிடம் ஜடேஜா முறையிட்டார். ரசிகர்களும் குழம்பிவிட்டார்கள். 

            

எல்லைக் கோட்டை நின்று கொண்டு இதனை கவனித்துக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அவர் மைதானத்திற்குள் வேகவேகமாக சென்றார். நடுவர்களிடம் சென்று மிகவும் ஆக்ரோஷமாக விவாதம் செய்தார். இதனை யாருமே எதிர்பார்க்கவேயில்லை.

                    

இந்தக் காட்சியை மைதானத்தில், தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் யாராலும் ஒரு கணம் நம்பியிருக்க முடியாது. தங்களது கைகளை கிள்ளி பார்த்திருப்பார்கள். தோனியா இப்படி மைதானத்திற்கு சென்று ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுப்பியிருக்கும். 

            

தோனி பேசியும் நோ பால் கொடுக்கப்படவில்லை. ஆனால், சண்ட்னெர் கடைசி பந்தில் அபாரமாக சிக்ஸர் விளாசி சென்னை அணியினை வெற்றி வாகை சூட வைத்தார். கடைசி பந்தில் அடிக்கப்பட்ட சிக்ஸரை யாருமே எதிர்ப்பார்க்கவில்லை. ஏனெனில் சர்ச்சைக்குரிய 4வது பந்திற்கு பிறகு ஆட்டத்தில் பரபரப்பு மேலும் கூடிவிட்டது. சண்ட்னெர் சிக்ஸரால் சிஎஸ்கே வீரர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். 

ஆனால், தோனி நடந்து கொண்ட விதம் குறித்து பெரிய விவாதமே கிளம்பிவிட்டது. கூல் கேப்டன் என்று அழைக்கப்பட்டு வந்த தோனி, தன்னுடைய பொறுமையை இழந்திருக்கக் கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த ஐபிஎல் தொடரில் நடுவர்கள் தொடர்ச்சியாக தவறு செய்து வருகின்றனர்.

                 

ஏற்கனவே, மும்பை - பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மல்லிங்கா ஸ்கிரீசை தாண்டி பந்துவீசியை நடுவர் கவனிக்க தவறிவிட்டார். கடைசி ஓவரில் பெங்களூர் அணியின் வெற்றியையே அது பதம் பார்த்துவிட்டது. அதனால், நோ பால் என்பது தெரிந்ததும் நடுவரிடம் சென்று கேப்டன் விராட் கோலி வாக்குவாதம் செய்தார். அந்த வகையில் விராட் கோலிக்கு அடுத்து தோனி அதேபோல் ஒரு செயலில் ஈடுபட்டுள்ளார். விராட் அடிக்கடி கோபப்படுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், தோனி அப்படியல்ல. அதனால்தான் அவர் அப்படி நடந்துகொண்டது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. 

               

விதிமுறைகளை குறிப்பிட்டு பேசுபவர்கள், போட்டியில் ஒரு முடிவை சொல்வதற்கும் அதனை திரும்ப பெறுவதற்கு நடுவர்களுக்கு உரிமை உள்ளது. அந்த வகையில், இந்த வகையிலான நோ பால்களை அறிவிக்கும் உரிமை லெக் திசையில் நிற்கும் நடுவருக்கே உண்டு. ஆனால், முதன்மை நடுவர் அதனை அறிவித்துவிட்டார். இடுப்புக்கு மேலே பந்து நேராக வீசப்படும் பட்சத்தில் அதனை நோ பால் என்று லெக் திசை நடுவர் அறிவிப்பார்.

இந்த விஷயத்தில் இடுப்புக்கு கீழே வந்ததால் நோ பால் அல்ல என்று நடுவர்கள் கூறிவிட்டனர். தோனியின் இந்தச் செயல் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். சிலர், கேப்டன் என்ற முறையில் இப்படி செயல்படுவது சரியானது என்றும் சிலர் கூறினர்.

               

தோனியின் பக்கம் நின்று பேசுபவர்கள், நோ பால் கொடுக்கப்பட்ட போது அவர் எதுவும் சொல்லவில்லை. நோ பால் கொடுத்து பின்னர் திரும்ப பெறப்பட்டதால்தான் கேப்டன் என்ற முறையில் விளக்கம் கேட்க அவர் மைதானத்திற்கு சென்றுள்ளார். தோனி நடந்து கொண்ட விதத்திற்காக அவருக்கு 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. 

                              

ஆனால், வழக்கமாக சர்வதேச போட்டிகளில் இதுபோன்ற நடத்தைகளுக்கு ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் போட்டிகளில் தடைவிதிக்கப்படும். ஆனால், தோனிக்கு ஏன் எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்று பலர் கேள்வி எழுப்பினர். மற்றொரு தரப்பினர் தோனிக்கு அபராதம் விதித்துவிட்டீர்கள், தவறு செய்த நடுவர்களுக்கு ஏன் எவ்வித தண்டனையும் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

               

இப்படி ஒரு பக்கம் கடுமையான விவாதம் நடந்து கொண்டிருக்க, போட்டி முடிந்ததில் இருந்து தோனியின் செயலை அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள். குறிப்பாக டிக் டாக்கில் அதிக வீடியோக்களை உடனடியாக உருவாக்கினார்கள்.  ‘கெத்தா நடந்து வரான்.. கேட்டையெல்லா கடந்து வரான்’ என்ற ‘பேட்ட’ படப் பாடலை வைத்து நிறைய பேர் டிக் டாக் செய்திருந்தார்கள். தோனியின் ஆக்ரோஷம் நிறைந்த படங்களை அதிக அளவில் பகிர்ந்தனர்.  

                   

போட்டியைப் பொறுத்தவரை 24 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்துவிட்ட நிலையில் இருந்த அணியை அரைசதம் அடித்து வெற்றியை நோக்கி அழைத்து வந்தார். அப்போது, ஆர்ச்சர் பந்துவீச்சில் தோனியின் ஹெல்மெட்டில் பந்து பலமாக தாக்கியது. ஆனால், அதனை பொருட்படுத்தால் தோனி தொடர்ந்து விளையாடினார்.

                 

ஒரு நிமிடம் பேட்டை தரையில் வைத்து அவர் தன்னை ஆசுவாசப்படுத்தினார். அந்தப் படம் சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் பதிவிட்டு, ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ எனப் பாரதியின் வரிகளை குறிப்பிட்டிருந்தனர். 

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close