[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பெண்கள் பற்றி சர்ச்சைக் கருத்து: பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு நோட்டீஸ்!

bcci-ombudsman-summons-pandya-rahul-for-deposition

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுலுக்கு விசாரணை அதிகாரி டி.கே.ஜெயின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் இயக்குனர் கரண்ஜோஹர் நடத்திய டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற் றனர். அப்போது பெண்கள் குறித்து இவர்கள் தெரிவித்த கருத்து சர்ச்சையானது. இதையடுத்து இருவரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்தது. பின்னர் அதை விலக்கி தொடர்ந்து விளையாட அனுமதித்தது. இதற்கிடையே தங்கள் பேச்சுக்கு இருவரும் மன்னிப்பு கேட்டனர்.

 இதற்கிடையில் இருவர் மீதான புகார் குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்நிலையில் அவர், ஹர்திக் பாண்ட்யா, ராகுல் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கூறியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close