[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

ஆஸி.யுடன் முதல் டி20: சாதனை படைப்பாரா ரோகித் சர்மா?

t20-prelude-to-world-cup-prep-as-india-and-australia-meet-again

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி20 கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டி 20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது. 

உலக கோப்பைக்கு முன் இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச தொடர் இது. இதனால் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதியான வீரர்களை அடையாளம் காண இந்த தொடர் உதவும். இதற்காக இந்திய வீரர்கள் நேற்று கடும் பயிற்சியில் ஈடுபட்டனர். 

தமிழக வீரர் விஜய் சங்கர், நியூசிலாந்து தொடரில் சிறப்பாக ஆடினார். இந்த தொடரிலும் அவர் சிறப்பாக செயல்பட்டால் உலக கோப்பையில் அவரது இடம் உறுதியாகும் என்று தெரிகிறது. அதே நேரம் ஒரு நாள் தொடரில் கழற்றி விடப்பட்ட தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், இந்த டி20 ஓவர் தொடரில் தனது திறமையை வெளிப்படுத்தும் தீவிரத்தில் இருப்பார் என எதிர்பார்க்கலாம்.

இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, இன்றைய போட்டியில் 2 சிக்சர் அடித்தால், டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர் விளாசிய கிறிஸ் கெய்ல், மார்ட்டின் கப்தில் (தலா 103 சிக்சர்) ஆகியோரை முந்துவார்.

ஆஸ்திரேலிய அணியில் பெரும்பாலான வீரர்கள் பிக்பாஷ் டி20 போட்டியில் விளையாடி விட்டு வந்திருப்பதால், அந்த அனுபவம் அவர்களுக்கு கைகொடுக்கும். அந்த அணியில், கேப்டன் ஆரோன் பின்ச், டியார்ஸி ஷார்ட், மேக்ஸ்வெல், ஆல்-ரவுண்டர் ஸ்டோயினிஸ் ஆகியோர் அதிரடியில் மிரட்டுவார்கள். இவர்கள் நிலைத்து நின்று ஆடினால் ரன்வேகம் அதிகரிக்கும். அதனால் இவர்களை விரைவில் வீழ்த்துவதற்கு இந்திய வீரர்கள் வியூகம் வகுத்திருப்பார்கள்.

இந்திய அணியில், ரோகித் சர்மா, தவான், விராத் கோலி, ரிஷாப், தோனி, தினேஷ் கார்த்திக் என அனைவருமே செம பார்மில் இருப்பதாலும்  இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் இருக்கும் என்பதாலும் போட்டியில் விறுவிறுப்புக்குக் குறைவிருக்காது. இரு அணிகளும் இதுவரை 18 முறை  மோதியுள்ளன. இதில் 11 போட்டியில் இந்தியாவும், 6 போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை. இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close