[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - கே.எல்.ராகுல் உள்ளே.. தினேஷ் வெளியே

india-vs-australia-2019-bcci-announces-squad-virat-kohli-returns-kl-rahul-and-rishabh-pant-included

ஆஸ்திரேலிய தொடரில் விளையாடும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அந்தத் தொடரில் இடம்பிடிக்க வீரர்கள் இடையே சமீபகாலமாக கடும் போட்டி நிலவி வருகிறது. உலகக் கோப்பைக்கான அணியில் யாருக்கெல்லாம் இடம் கிடைக்கும் என்பது குறித்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

       

ஆஸ்திரேலிய அணி இந்த மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. பிப்ரவரி 24 மற்றும் 27ஆம் தேதிகளில் விசாகப்பட்டினம், பெங்களூருவில் இரண்டு இடங்களில் டி20 போட்டிகள் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, மார்ச் 2, 5, 8, 10, 13 ஆகிய 5 தேதிகளில் ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆஸ்திரேலியா தொடரில் விளையாடும் இந்திய அணி உலகக்கோப்பைக்கான உத்தேச அணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

             

இந்நிலையில், ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்க தேர்வுக் குழு மும்பையில் இன்று கூடியது. ஆலோசனைக்கு பின்னர், ஆஸ்திரேலிய தொடரில் விளையாடும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 தொடருக்கு கேப்டன் விராட் கோலி திரும்பியுள்ளார். 

           

டி20 தொடருக்கான அணி:-

விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்ட்யா, குர்ணால் பாண்ட்யா, விஜய் சங்கர், சாஹல், ஜஸ்பிரிட் பும்ரா, உமேஷ் யாதவ், சித்தார்த் கௌல், மயங்க் மார்கண்டே

முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான அணி:

விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பண்ட், அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், சாஹல், குல்தீப், ஜஸ்பிரிட் பும்ரா, முகமது சமி, சித்தார்த் கௌல்

கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான அணி:

விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, புவனேஸ்வர் குமார், சாஹல், குல்தீப், முகமது சமி, விஜய் சங்கர், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட்

          

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close