[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

'நான் என்ன தவறு செய்தேன்' ஐபிஎல்லில் ஏலம் போகாததால் மனோஜ் திவாரி கவலை !

manoj-tiwary-questions-what-went-wrong-after-remaining-unsold

கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் ஒரு தொடராக இருப்பது ஐபிஎல் டி20 கிரிக்கெட். உலக வீரர்கள் முதல் உள்ளூர் வீரர்கள் வரை கலக்கும் களமாக அது உள்ளது. 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 12வது ஐபிஎல் தொடரின் ஏலம் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக 14 நாடுகளைச் சேர்ந்த 1003 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் பதிவு செய்த வீரர்களில் 346 பேரை ஏலப் பட்டியலுக்கு ஐபிஎல் நிர்வாகக் குழு தேர்வு செய்தது.

Read Also -> ஐபிஎல் ஏலத்தில் 4.8 கோடிக்கு எடுக்கப்பட்ட 17 வயது சிறுவன்

இதில் வீரர்களின் தற்போதைய ஸ்டிரைக் ரேட்டை பொறுத்து, அவர்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதில் அதிகபட்சமாக உனத்கட், வருண் சக்கரவர்த்தி 8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர். ஏலத்தில் முதல் வீரராக களமிறங்கிய மனோஜ் திவாரியை யாரும் வாங்க முன்வரவில்லை. 2-வது வீரராக ஏலம் விடப்பட்ட புஜாராவையும் யாரும் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இவர்கள் இருவரின் அடிப்படை விலை ரூ. 50 லட்சம்.

Read Also -> ஆரம்ப விலைக்கே விலை போன யுவராஜ் சிங்

தன்னை எந்த அணியும் ஏலம் எடுக்காதது, மனோஜ் திவாரியை வருத்தமடைய வைத்திருப்பதாக தெரிகிறது. இதனையடுத்து தன்னுடைய ஆதங்கத்தை ட்விட்டரில் கொட்டி தீர்த்துள்ளார் அவர். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் "எனக்கு சில விஷயங்கள் வியப்பாக இருக்கிறது. இந்திய அணிக்காக ஒரு போட்டியில் சதம் அடித்தேன். அதன் பின்பு தொடர்ச்சியாக 14 ஒரு நாள் போட்டிகளில் அணியில் சேர்க்கப்படவில்லை."

Read Also -> 'கே.எல்.ராகுலுக்கு முதலில் டிக்கெட் கொடுத்து ஊருக்கு அனுப்பவும்' சுனில் கவாஸ்கர் காட்டம்

"2017 ஆம் ஆண்டு சீசன் ஐபிஎல் போட்டிகளில் ஏராளமான ரன்களை குவித்துள்ளேன், அதற்காக கோப்பைகளையும் வென்றுள்ளேன். அவற்றையெல்லாம் இப்போது பார்க்கிறேன். என்ன தவறு செய்தேன் ? எது தவறாக போனது ? எனக்கு புரியவில்லை" என தெரிவித்துள்ளார்.

Read Also -> 'எல்லாம் பழசு இரண்டே பேர் புதுசு' சாதிக்குமா சிஎஸ்கே ?

மனோஜ் திவாரி இந்திய அணிக்காக 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு சதம், ஒரு அரை சதம் என மொத்தம் 287 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல ஐபிஎல் தொடரில் 98 போட்டிகளில் விளையாடி 1695 ரன்கள் எடுத்துள்ளார். மனோஜ் திவாரியின் இந்த ட்வீட் ஐபிஎல் கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல டெஸ்ட் போட்டிகளில் அசத்தும் புஜாராவையும் எந்த அணியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close