[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

இஷாந்த், பும்ரா வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து!

ishant-bumrah-headline-india-s-strong-performance

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. சவுதாம்டனில் நடந்த நான்காவது போட்டியில் வெற்றியின் அருகே சென்று தோல்வியை தழுவியது. இதையடுத்து இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் தோல்வி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. 

இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவும், ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக புதுமுக வீரர் ஹனுமா விஹாரியும் சேர்க்கப் பட்டனர். 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அலஸ்டைர் குக் பங்கேற்கும் கடைசி சர்வதேச போட்டி என்பதால் அவர் களத்திற்குள் நுழைந்ததும், இந்திய வீரர்கள் வரிசையாக நின்று அவருக்கு மரியாதை அளித்தனர். கேப்டன் கோலி, அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவுக்கு எதிராக குக் ஆடும் 30-வது டெஸ்ட் இதுவாகும். இதன் மூலம் இந்தியா வுக்கு எதிராக அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

குக்கும், ஜென்னிங்ஸும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 60 ரன்கள் எடுத்தது. 23 ரன்கள் எடுத்த நிலையில் ஜென்னிங்ஸ், ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, குக், மொயி ன் அலி ஜோடி நிதானமாக விளையாடியது. இவர்கள் இருவரும் அடுத்தடுத்து வெளியேறி இருக்க வேண்டியது. குக், 37 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை, ஸ்லிப்பில் நின்ற ரஹானே தவற விட்டார். மொயீன் அலி 2 ரன்னில் கொடுத்த கேட்ச்சை, கேப்டன் விராத் கோலி கோட்டை விட்டார்.

இதைப் பயன்படுத்திக் கொண்ட இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இவர்கள் விக்கெட்டை இந்திய பந்துவீச்சாளர்களால் எளிதில் எடுக்க முடியவில்லை.  சிறப்பாக விளையாடி வந்த குக், 71 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் போல்ட் ஆனார். குக் அவுட் ஆன அதே ஓவரில் கேப்டன் ரூட் விக்கெட்டையும் பும்ரா வீழ்த்தினார். ரூட், டக்-அவுட் ஆன வேகத்தில் பேர்ஸ்டோவ், இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால், இங்கிலாந்து அணி அடுத்தடுத்து 3 மூன்று விக்கெட்களை இழந்தது. 

இதனையடுத்து, மொயின் அலி, ஸ்டோக்ஸ் ஜோடி சற்று நேரம் நிலைத்து நின்றது. ஸ்டோக்ஸ் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். அவரை தொடர்ந்து சாம் கர்ரன் இரண்டு பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில் டக் அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய மொயின் அலி 50 ரன் எடுத்த நிலையில், இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவர் 170 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இருந்தார். 

இங்கிலாந்து அணி முதல் நாளில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஸ் பட்லர் 11 ரன்னுடனும் ரஷித் 4 ரன்னுடமும் களத்தில் உள்ளனர். இன்று, இரண்டாவது நாள் ஆட்டம் நடக்கிறது  இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்கள் சாய்த்தார். பும்ரா, ஜடேஜா தலா இரண்டு விக்கெட்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து அணி 130 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே இழந்து இருந்தது. 250 ரன்களுக்கு மேல் முதல் நாளில் அடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் விக்கெட்டுகள் சரிந்தன.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close