[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

இங்கிலாந்து மண்ணில் அபார சதம்: விமர்சனங்களை விளாசிய கோலி!

kohli-s-epic-149-highlights-thrilling-day

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விராத் கோலியின் அபார சதத்தால் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 274 ரன்கள் எடுத்தது.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பர்மிங்ஹாமில் நடந்து வருகிறது. இது இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆயிரமாவது டெஸ்ட் போட்டி. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்தெடுத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 80 ரன்னும் பேர்ஸ்டோ 70 ரன்னும் எடுத்தனர்.

இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும், முகமது ஷமி 2 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த் தினர்.

இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே ஷமியின் பந்துவீச்சில் சாம் குர்ரன் (24 ரன்), தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனதும் இங்கிலாந்தின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. பின்னர் இந்திய அணி களமிறங்கியது.  முரளி விஜய்யும், தவானும் மெதுவாக ஆட்டத்தைத் தொடங்கினர். ஆனால் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்த நிலையில் பிரிந்தது.

(சாம் குர்ரன்)

சாம் குர்ரன் பந்து வீச்சில் முரளிவிஜய் (20 ரன்) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த கே.எல் ராகுலும் அதே ஓவரில் அவுட் ஆகி ஏமாற்றினார். தொடர்ந்து கேப்டன் விராத் கோலி வந்தார். சிறப்பாக பந்துவீசிய 20 வயது சாம் குர்ரன், இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தார். அவரது பந்து வீச்சில் தவானுக்கும் (26 ரன்) விக்கெட்டை பறிகொடுக்க ரஹானே வந்தார்.

அணியின் ஸ்கோர் 100 ரன்னில் இருந்த போது ரஹானே (15 ரன்), பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, தடுமாறியது இந்திய அணி. 

அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா, கோலியுடன் இணைந்தார். அவுட் கண்டத்தில் இருந்து இரண்டு முறை தப்பிய ஹர்திக், தன் பங்குக்கு 22 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். பிறகு அஸ்வின் வந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் நிலைத்து நின்று அரை சதம் அடித்தார் கேப்டன் விராத். அடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் அஸ்வின்(10), முகமது ஷமி (2) ஆகியோர் விக்கெட்டுகளை இழக்க, இந்திய அணி 200 ரன்களையாவது தொடுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. அடுத்து வந்த இஷாந்த் சர்மாவும் அவுட் ஆக, சதத்தை நோக்கி சென்ற விராத் கோலி, அதை பூர்த்தி செய்வாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய உமேஷ் யாதவ், விராத்துக்கு உதவியாக நின்றார்.

கடைசி விக்கெட் எப்போதும் விழுந்துவிடும் என்பதால், உமேஷ் யாதவுக்கு அதிகமாக வாய்ப்பளிக்காமல் தானே பேட்டிங் ஏரியாவில் நின்ற கோலி,  65-வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் பவுண்டரி அடித்து சதத்தைப் பூர்த்தி செய்தார். 172 பந்துகளில் 14 பவுண்டரியுடன் இந்த சதத்தை அவர் எட்டினார். இது அவருக்கு 22-வது சதம். 

இரண்டு முறை கேட்ச்சில் இருந்து தப்பிய கோலி, இங்கிலாந்து மண்ணில் அடிக்கும் முதல் டெஸ்ட் சதம் இதுவாகும். சதம் அடித்ததும் கத்தி னார் விராத். இதன் மூலம், இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் சோபிக்கவில்லை என்ற விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விராத். 

பின்னர் 149 ரன்கள் எடுத்து ரஷித் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார் விராத். இந்திய அணி, முதல் இன்னிங்சில் 274 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சாம் குர்ரன் 4 விக்கெட்டும்,  ஆண்டர்சன்,  ரஷித், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

(அஸ்வின் பந்தில் போல்டாகும் குக்)

13 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் அலஸ்டைர் குக், அஸ்வின் பந்து வீச்சில் மீண்டும் போல்டு ஆனார். முதல் இன்னிங் ஸிலும் அவர், அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்திருந்தார். ஜென்னிங்ஸ் 5 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close