[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு

சேவாக் எப்படிபட்ட அதிரடி ஆட்டக்காரர் தெரியுமா?

sehwag-60-off-36-balls-vs-sri-lanka-in-the-india-vs-sri-lanka-2008-asia-cup-at-karachi

இந்திய அணியைப் பொறுத்துவரை வீரேந்திர சேவாக்கின் தொடக்க ஆட்டம் எப்போதுமே சிறப்பானதாக இருக்கும். அவர் களத்தில் 20 ஓவர்கள் நீடித்தாலே போது என்றே ரசிகர்கள் நினைப்பார்கள். ஆனால், அது அரிதாகத்தான் நடக்கும். அப்படி சற்று நேரம் அவர் களத்தில் நின்று விட்டாலே இந்திய அணி ரன் ரேட் மளமள உயர்ந்துவிடும். தன்னுடன் எவ்வளவு பெரிய வீரர் விளையாடினாலும் அதைப்பற்றி எல்லாம் யோசிக்கமாட்டார். சச்சினே உடன் பேட்டிங்  செய்தாலும், அவரை வைத்துக் கொண்டு சேவாக் படம் காட்டுவார். 

ஆசியக் கோப்பை இன்னும் சில வாரங்களில் நடக்கவுள்ளது. 2008ம் ஆண்டு ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் சேவாக்கின் அதிரடி ஆட்டத்தை ரசிகர்களால் என்றும் மறக்க முடியாது. அந்தப் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆனால், சேவாக் களத்தில் இருந்தவரை ஆட்டத்தின் தன்மையே வேறாக இருந்து. முதலில் விளையாடிய இலங்கை அணி 273 ரன்கள் எடுத்தது. 274 ரன் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி விளையாடியது. காம்பீரும், சேவாக்கும் தொடக்க வீரர்கள். காம்பீர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்க சேவாக் தனது அதிரடியால் மிரட்டினார். இலங்கையின் அனுபவம் வாய்ந்த வீரர் சமிந்தா வாஸ் வீசிய 3வது ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசி அசத்தினார். 

                 

26 பந்துகளில் சேவாக் அரைசதம் கடந்தார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் வெறும் 58 ரன்கள்தான். இந்திய அணி 58 ரன் எடுத்திருந்த நிலையில், சேவாக் மட்டும் அதில் 50 ரன்கள் எடுத்தார். இப்படிப்பட்ட அதிரடி வீரர்தான் சேவாக். அதனால், சேவாக்கிற்கு தொடக்கத்தில் பந்து வீச பல வேகப்பந்து வீச்சாளர்கள் பயந்தனர்.

பின்னர், 60 ரன்கள் எடுத்த நிலையில் சேவாக் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். சேவாக் ஆட்டமிழக்கும் போது இந்திய அணி 9.2 ஓவர்களில் 76 ரன் எடுத்து இருந்தது. இதுதான் சேவாக்கின் ஓபனிங். அந்தத் தொடர் முழுவதுமே சேவாக் பேட்டிங் நெருப்பாக இருந்தது. 78(44), 119(95), 49(33), 42(34), 60(36) இதுதான் 2008 ஆசியக் கோப்பையில் அவர் அடித்த ரன்கள். சந்தித்த பந்துகளுக்கு குறைவாக ரன்கள் அடிப்பது சேவாக்கிற்கு அரிது.

            

ஆனால், சேவாக் அந்தப் போட்டியில் கொடுத்த அந்த ஓபனிங்கை மற்ற வீரர்கள் பயன்படுத்த தவறிவிட்டனர். பின் வந்தவர்களில் தோனி மட்டும் 49 ரன்கள் எடுக்க, மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 173 ரன்னில் ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் பேட்டிங்கை விமர்சித்தவர்கள் இந்தப் போட்டியை கவனித்து இருந்தால் தெரியும். அப்போது இருந்து மிடில் ஆடர்கள் சொதப்பும் போதெல்லாம் தனி ஆளாக நின்று கௌரவமான ஸ்கோரை கொன்று வர அவர் எப்படி போராடினார் என்று.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த 13 போட்டிகளில் இந்திய அணி 6 முறையும், இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இந்நிலையில் 14 வது போட்டிக்கான அட்டவணையைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் இந்தப் போட்டியில் முதல் போட்டி செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது. இறுதிப்போட்டி 28-ம் தேதி நடக்கிறது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கின்றன. தற்போது, விராட் கோலி தலைமையிலான இளம்படை விளையாடுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close