[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்
  • BREAKING-NEWS வரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்
  • BREAKING-NEWS இந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி

ஆப்கானை சாதாரணமாக நினைக்கவில்லை: ரஹானே

important-that-we-trained-our-minds-rather-than-skills-rahane

’ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியை சாதாரணமாக நினைக்கவில்லை’ என்று இந்திய டெஸ்ட் அணியின் பொறுப்பு கேப்டன் ரஹானே கூறினார்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்தை வழங்கியது. இதையடுத்து அந்த அணி, தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடன் இன்று விளையாடுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு இது முதல் டெஸ்ட் போட்டி என்பதால் வரலாற்று சிறப்புமிக்க போட்டியாகப் பார்க்கப்படுகிறது. 

பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்தப் போட்டி பற்றி ரஹானே கூறும்போது, ‘கடந்த இரண்டு மாதமாக நடந்த ஐபிஎல் போட்டியை முடிந்துகொண்டு டெஸ்ட் போட்டிக்கு வந்திருக்கிறோம். டி20 போட்டியின் மனநிலையில் இருந்து மாறுவதற்காகத்தான் கடந்த 3 நாட்களாக பயிற்சி மேற்கொண்டோம். இந்தப் போட்டியை மற்றொரு டெஸ்ட் போட்டியை போலதான் பார்க்கிறோம். ஆப்கான் அணியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. அந்த அணியை மதிக்கிறோம். அனைவரும் நூறு சதவிகித உழைப்பைக் கொடுக்க வேண்டியது முக்கியம். எந்த வித கருணையுமின்றி முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம்.

ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் முக்கியம். ஆப்கான் அணிக்கு இது முதல் டெஸ்ட். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் போட்டியில் பங்கேற்பது பெருமையான விஷயம். அவர்களிடம் சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். நம்மிடம் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் டெஸ்ட் அணிக்கு திரும்பியிருக்கிறார். அவரது அனுபவம் அணிக்கு பலமாக இருக்கும். ஆசிய கோப்பையிலும் ஐபிஎல் போட்டியிலும் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார்’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close