[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

வாழ்வா, சாவா போட்டியில் மும்பை, ராஜஸ்தான்!

mi-vs-royals-clash-in-fight-for-survival

ஐபிஎல் போட்டியில் அடுத்த சுற்றுப் போட்டிக்கு தயாராகிவிட்டன அணிகள். முதல் இடத்தை பிடித்து கம்பீரமாக அமர்ந்துவிட்டது ஐதராபாத். அடுத்த இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ். அடுத்தடுத்த இடங்களில் பஞ்சாப், கொல்கத்தா அணிகள் இருக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு பிளே ஆப் சுற்று உறுதியாகிவிடும். 

புள்ளிப்பட்டியலில் ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் இருக்கிறது மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள். இரண்டு அணிகளுமே தலா 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது. இரு அணிகளுமே அடுத்து சந்திக்கும் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம். இந்த போட்டியில் தோல்வியடையும் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கி விடும் என்பதால் இரண்டு அணிக்குமே இது வாழ்வா, சாவா போராட்டம். இதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் மிரட்டி வருகிறார். சென்னைக்கு எதிரான போட்டியில் கடைசி வரை நின்று 95 ரன்கள் குவித்தார். அவரைதான் நம்பி இருக்கிறது ராஜஸ்தான். ஆல் ரவுன்டர் பென் ஸ்டோக்ஸ், கேப்டன் ரஹானே ஆகியோர் ஃபாமில் இல்லை. சஞ்சு சாம்சன் எப்போதாவது அடித்து ஆடுகிறார்.  

அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஸ்டோக்ஸ் இந்தத் தொடரில் சிறப்பான இன்னிங்ஸ்சை இதுவரை வெளிப்படுத்தவில்லை. கடந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், இன்றும் அப்படியே இறங்கலாம். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ராஜஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் அமர்க்களப்படுத்துகிறார். அவருக்கு பக்கபலமாக உனட்கட், அங்கித் சர்மா இருக்கும் பட்சத்தில் இன்றைய போட்டி பரபரப்பாகும். சுழலில் கிருஷ்ணப்பா கவுதம், சோதி ஆகியோர் அசத்துகின்றனர்.

மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இஷான் கிஷான் கடந்த போட்டியில் அதிரடியாக மிரட்டியதால் மும்பை அணி வெற்றி பெற்றது. இன்றைய போட்டியிலும் அவர் கலக்குவார் என எதிர்பார்க்கலாம். கேப்டன் ரோகித் எப்போது ஃபாமுக்கு வருவார், எப்போது ஏமாற்றுவார் என்பது அவருக்கே தெரியாது. ஹர்திக் பாண்ட்யாவும் அவரது சகோதரர் குணாலும் ஆல் ரவுண்டராக ஜொலிக்கிறன்றனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பும்ரா, இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மேக்லனஹன், மயங்க் மார்கண்டே ஆகியோர்தான் மும்பையின் பலம். இப்போது பென் கட்டிங் வந்திருக்கிறார். கடைசி கட்ட ஓவர்களில் கலக்குகிறார். 

(மார்கண்டே)

தொடர்ச்சியாக 3 வெற்றி பெற்றுள்ள மும்பை அணி, நம்பிக்கையுடன் இருக்கிறது. அந்த வெற்றியை தொடர வேண்டும் என்ற நிலையில் இருக்கிறது. இரண்டு அணிகளும் ஏற்கனவே சந்தித்த போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு பழிவாங்கும் முயற்சியில் மும்பை அணி களமிறங்கலாம்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close