[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

முதல்ல, அவருக்கு, அடுத்து இவருக்கு... அடுத்தடுத்து மாறிய ’ஆரஞ்சு’!

orange-cap-ambati-rayudu-steals-top-spot-from-ab-de-villiers

ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் குவிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் ’ஆரஞ்சு நிறத் தொப்பி’ நேற்று அடுத்தடுத்த மாறிய சம்பவம் சுவராஸ்யமாக அமைந்தது.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நேற்று மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் அபாரமாக ஆடி, 30 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய சென்னை அணி, ராயுடு மற்றும் தோனியின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்றது. ராயுடு, 53 பந்துகளில் 82 ரன்களும் தோனி, 34 பந்துகளில் 70 ரன்களும் விளாசினர். 

முதல் இன்னிங்ஸில் பெங்களூர் அணியின் ஆட்டம் முடிந்ததும் அதிக ரன்கள் குவித்த டிவில்லியர்ஸுக்கு ஆரஞ்சு நிறத் தொப்பி வழங்கப் பட்டது. அவர் இந்த தொடரில் இதுவரை (நேற்று வரை) 280 ரன்கள் குவித்துள்ளார். அதை அணிந்து கொண்டு பீல்டிங் செய்தார். ஆனால் போட்டி முடிந்ததும் அந்த தொப்பி ராயுடு வசமானது. அவர்  டிவில்லியர்ஸ்சை விட 3 ரன்கள் அதிகம் பெற்றதால் இந்த மியூசிக்கல் சேர் ஆட்டம் நடந்தது. அவர் 283 ரன்கள் எடுத்துள்ளார். 

ஒரே போட்டியின் போது, ஆரஞ்சு நிறத் தொப்பி அங்கும் இங்கும் மாறியது, சுவாரஸ்யமாக இருந்தது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close