[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

தென்னாப்பிரிக்க டெஸ்ட்: வலுவான நிலையில் ஆஸி!

south-africa-show-fight-but-australia-s-lead-crosses-400

தென்னாப்பிரிக்க அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 402 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடந்துவருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 351 ரன்கள் எடுத்தன. தென்னாப்பிரிக்க அணி 162 ரன்கள் எடுத்தன. தென்னாப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ் 71 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ரன்கள் எடுக்கத் திணறினர்.

189 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. 3-வது நாளான நேற்று அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பான்கிராஃப்ட் 53 ரன்களும் கேப்டன் 38 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நேற்றைய ஆட்டநேர முடிவில் அந்த அணி, 9 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்க தரப்பில் மோர்க்கல், கேசவ் மகாராஜ் தலா 3 விக்கெட்டை வீழ்த்தினர். ரபடா 2 விக்கெட்டும் எல்கர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் மூலம் ஆஸ்திரேலியா 402 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close