[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வு அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது
 • BREAKING-NEWS தூத்துக்குடி அருகே கடலில் நாட்டுப்படகு பழுதாகி மூழ்கியதில் மீனவர் கென்னடி உயிரிழப்பு
 • BREAKING-NEWS நீர்மட்டம் குறைந்ததால் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராகாததால் 16வது நாளாக குளிக்க தடை விதிப்பு
 • BREAKING-NEWS அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வருகை
 • BREAKING-NEWS டிடிவி தினகரன் யார்?, கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
 • BREAKING-NEWS உடல்நலன் கருதி அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல்
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது
 • BREAKING-NEWS வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன், டிவிக்கான சுங்கவரி 10% இருந்து 20% உயர்வு- மத்திய அரசு
 • BREAKING-NEWS அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை அவகாசம்- உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
விளையாட்டு 03 Dec, 2017 05:57 PM

கோலியின் இரட்டை சதத்தால் வெற்றியை நோக்கி இந்திய அணி

sri-lanka-close-day-two-on-131-3-in-reply-to-indias-score-of-536-7d

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்திருந்தது.  முரளி விஜய் 155 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் விராட் கோலி 156 ரன்களுடனும், ரோகித் ஷர்மா 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

        

இதனையடுத்து, இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பாக ஆடிய விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். இது அவரது 6வது இரட்டை சதம். ரோகித் ஷர்மா 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை பந்துவீச்சை சிதறடித்த விராட் கோலி, 243 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது.

        

இதனையடுத்து, விளையாடிய இலங்கை அணி ரன் கணக்கை துவங்குவதற்கு முன்பு முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. கருணரத்னே தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆனார். 14 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை அணி தனது இரண்டாவது விக்கெட்டையும் இழந்தது. டி சில்வா 1 ரன்னில் இசாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, பெராராவுடன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்து இருவரும் நிதானம் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதோடு அவ்வவ்போது பவுண்டரிகளையும் அடித்தனர்.

        

75 ரன்கள் எடுத்திருந்த போது இந்த ஜோடி பிரிந்தது. 54 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த நிலையில் பெராரா, ஜடேஜாவின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். இதனால் இலங்கை அணி 75 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து மேத்யூஸ் உடன் கேப்டன் சண்டிமால் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. மேத்யூஸ் 57, சண்டிமால் 25 ரன்களுடன் களத்தில் உள்ளனர். போட்டி முடிய மூன்று நாட்கள் உள்ளதால் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close