[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா

இந்தியா - இலங்கை கடைசி டெஸ்ட்: முரளி விஜய்-க்கு இடம் கிடைக்குமா?

india-vs-srilanka-third-test-starts-today

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. 

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி, டிரா ஆனது. நாக்பூரில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று காலை தொடங்குகிறது. 

இப்போது இந்தியாவுக்கு, மூன்று தொடக்க ஆட்டக்காரர்களில் யாரை களம் இறக்குவது என்பது பிரச்னையாகி உள்ளது.  முதலாவது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரர்கள் தவான் 94 ரன்களும், ராகுல் 79 ரன்களும் விளாசினர். பிறகு 2-வது டெஸ்டில் இருந்து தவான் விலகினார். அவருக்கு பதிலாக களமிறங்கிய தமிழகத்தை சேர்ந்த முரளிவிஜய் (128 ரன்) சதம் அடித்தார். விஜய், தவான், ராகுல் ஆகிய மூன்று பேரும் நல்ல ஃபார்மில் உள்ளதால் யாரை கழற்றி விடுவது என்ற தர்மசங்கடத்தில் இந்திய அணி நிர்வாகம் உள்ளதாக கூறப்படுகிறது.

விராத் கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 8 தொடர்களை வென்றுள்ளது. இந்த கடைசி போட்டியில் டிரா செய்தாலே தொடரை வென்றுவிடும். இதையடுத்து டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 9 வெற்றிகளைப் பதிவு செய்திருந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் சாதனையை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close