[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

ஆடுகளம் பந்துவீச்சுக்கு உதவவில்லை: ஜடேஜா

got-no-hlep-form-the-pitch-jadeja

’நாக்பூர் ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை’ என்று சுழற்பந்துவீச்சாளர் ஜடேஜா கூறினார்.

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின், முதல் இன்னிங்சில் இலங்கை அணி 205 ரன்களில் ஆட்டமிழந்தது.

நாக்பூரில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி, 205 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்களும், ரவீந்திர ஜடேஜா, இசாந்த் ஷர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி தொடக்க விக்கெட்டை விரைவில் இழந்தது. லோகேஷ் ராகுல் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். முதல் நாள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் நாள் ஆட்டத்திற்கு பிறகு இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ’பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இருந்தும் நாங்கள் சிறப்பாக பந்துவீசி விக்கெட் எடுத்துள்ளோம். கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் இருந்தது. இந்த ஆடுகளத்தில் பந்து ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆகவில்லை. இருந்தும் சரியான இடங்களில் நானும் அஸ்வினும் பந்து வீசி விக்கெட்டை எடுத்தோம். இலங்கை வீரர்களை குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்தியதில் மகிழ்ச்சி. இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோரும் சிறப்பாகவே பந்துவீசினார்கள்’ என்றார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close