[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை

காக், டி வில்லியர்ஸ் கலக்கல்: எளிதாக வென்றது தென்னாப்பிரிக்கா

all-round-south-africa-seals-20-run-win

பங்களாதேஷ் உடனான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியது. இதையடுத்து  டி20 போட்டியில் விளையாடுகிறது. இரு அணிக்களுக்கு இடையேயான, முதல் டி20 கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள புளோயம்போன்டீனில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டி காக்கும், டிவில்லியர்ஸும் அதிரடியாக விளையாடினர். டி காக் 59 ரன்களும் டிவில்லியர்ஸ் 49 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி, 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. 

அடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணியால், 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்கா, 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பங்களாதேஷ் அணியின் சவுமியா சர்க்கார் அதிகப்பட்சமாக 47 ரன்கள் எடுத்தார். முகமது சைபுதீன் 39 ரன்கள் எடுத்தார். டி வில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : South AfricaDe KockDe VilliersBangladesh
Advertisement:
Advertisement:
[X] Close