[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆதரவு அளிக்க வேண்டும்: சச்சின் டெண்டுல்கர்

sachin-tendulkar-comes-out-in-support-of-west-indies-cricketers

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களுக்குத் தேவையான ஆதரவை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அளிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

வீரர்களின் பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ்‌ அணியின் கேப்டன் டேரன் சமி, தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியம் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்த நிலையில், சச்சின் இவ்வாறு கூறியுள்ளார்.

இளையோர் உலகக்கோப்பை, பெண்கள் உலகக்கோப்பை, ஆண்கள் உலகக்கோப்பை என மூன்று வகையான போட்டிகளிலும் பட்டம் வென்றிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, உண்மையான சாம்பியன் என‌ சச்சின் பாராட்டு தெரிவித்துள்‌ளார்‌.

‌இதனிடையே வீரர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close