[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் தலைமையில் வரும் 22 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்- தமிழக அரசு
  • BREAKING-NEWS தமிழக அரசின் ஸ்கூட்டர் மானியத் திட்டத்தை வரும் 24ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS தமிழக அரசின் ஸ்கூட்டர் மானியத் திட்டத்தை வரும் 24ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திரா: நெல்லூரில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 27 பேர் கைது
  • BREAKING-NEWS அரசியல் ஒரு சாக்கடை; யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம்- மு.க. அழகிரி
  • BREAKING-NEWS மேல்மலையனூர் அங்காளம்மன்கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை- மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS ஆந்திரா: கடப்பாவில் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட 5 தமிழர்கள் குறித்து விவரம் அறிய 9121100565,9121100581,9121100582 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்

ஒரு ஐ.பி.எல்-க்கு ரூ.54 கோடி: பணக்கார அமைப்பானது பிசிசிஐ

55-crore-vs-43-crore-ipl-t20-tie-to-fetch-bcci-more-money-than-odi

ஒரு ஐ.பி.எல். போட்டியை நடத்துவதன் மூலம் பிசிசிஐ-க்கு கிடைக்கும் வருமானம் ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியில் கிடைப்பதை விட அதிகம் ஆகும்.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமத்தை ரூ.16,347.5 கோடிக்கு ஸ்டார் இந்தியா ஏலத்தில் பெற்றுள்ளது. ஏலத்தில் 2018 முதல் 2022 வரையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமம் இன்று ஏலத்தில் விடப்பட்டது. 

இந்த ஒளிபரப்பு ஏலத்தின் மூலம் பி.சி.சி.ஐ ரூ.16,347.5 கோடி வருவாய் பெற்றுள்ளது. அடுத்து வரும் 5 ஐ.பி.எல் தொடர்களில் ஒரு தொடருக்கு 60 போட்டிகள் வீதம் 300 போட்டிகள் நடைபெறும். அதன்படி ஒரு போட்டி சுமார் ரூ.54.49 கோடி வருமானம் பிசிசிஐ-க்கு கிடைக்கும். ஆனால் ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியை நடத்துவதன் மூலம் பிசிசிஐ-க்கு ரூ.43 கோடி வருமானம் மட்டுமே கிடைக்கும்.

இந்த வருவாய் மூலம் பிசிசிஐ ஒரு பணக்கார அமைப்பாக மாறியுள்ளது. முன்பு பெற்று வந்த வருமானத்தை விட பல மடங்கு தற்போது அதிகரித்துள்ளது. கடந்த 2008 முதல் 2017 வரையிலான 10 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பு உரிமம் சோனி நிறுவனத்திற்கு ரூ.8200 கோடிக்கு ஏலம் விடப்பட்டு இருந்தது. இதன் மூலம் ஒரு போட்டிக்கு ரூ.13.67 கோடி மட்டுமே கிடைத்து வந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close