[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

நாக்பூர் சவால்: டி20 தொடரில் இந்திய அணி தடுமாறுவது ஏன்?

problem-of-plenty-for-india-as-they-face-england-to-save-series-in-nagpur

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நாக்பூர் மைதானத்தில் நாளை நடக்கிறது.

சொந்தமண்ணில் நடைபெற்ற சமீபத்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் வெற்றிகரமாகச் செயல்பட்ட இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை தோல்வியுடன் தொடங்கியுள்ளது. கான்பூரில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. டி20 அணியின் கேப்டனாக விராத் கோலியின் முதல் போட்டியே இந்திய அணிக்கு தோல்வி முகமாக அமைந்துவிட்டது.

இந்திய அணியின் ஸ்பெஷலிஸ்ட் தொடக்கவீரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் என இருவருமே இல்லாத நிலையில், மிடில் ஆர்டரைப் பலப்படுத்தும் பொருட்டு விராத் கோலி தொடக்க வீரராகக் களமிறங்கினார். ஆனால், கோலியின் இந்த யோசனை கைகொடுக்கவில்லை என்றே கூறலாம். இதேபோல கோலியுடன் தொடக்கவீரராகக் களமிறங்கிய கே.எல்.ராகுலின் மோசமான பார்மும் இந்திய அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. கடந்த போட்டியில் 147 ரன்கள் மட்டுமே இந்திய அணியால் சேர்க்க முடிந்தது. ஆடும் லெவனைத் தேர்வு செய்வதில் தோனியின் சூத்திரத்தை, கோலி பின்பற்ற வேண்டும் என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுனர்கள். அதேபோல, பேட்டிங் ஆர்டரும் ரன்கள் சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்கிறார்கள். இதனால், ஆடும் லெவனையும், பேட்டிங் ஆர்டரையும் கோலி கவனமாகக் கையாண்டால் மட்டுமே நாக்பூரில் நல்ல ரிசல்ட் கொடுக்க முடியும்.

அதேபோல பந்துவீச்சைப் பொறுத்தவரை கோலியின் எதிர்பார்ப்புகளை பும்ராவால் முதல் போட்டியில் முழுமையாகப் பூர்த்தி செய்ய இயலவில்லை. இதனால் அவருக்குப் பதில் புவனேஷ்வர் குமாரை ஆடும் லெவனில் சேர்க்கலாம் என்றும் கோலிக்கு ஆலோசனை கூறப்படுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கும் நிலையில், நாளைய போட்டி இந்திய அணிக்கு வாழ்வா சாவா போராட்டமே. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களைப் பொறுத்தவரை வெற்றிகரமான கேப்டனாக அறியப்படும் கோலி, அந்த மேஜிக்கை டி20 தொடரிலும் தொடரவே விரும்புவார். அவரது ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close