[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

ரஞ்சிக்கோப்பை தொடர் அரையிறுதியில் தமிழக அணி

tn-advance-ranji-trophy-semi-finals

ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறியது. கர்நாடக அணிக்கு எதிரான காலிறுதியில் தமிழக அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விசாகபட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸில் கர்நாடக அணி 88 ரன்களும், தமிழக அணி 152 ரன்களும் எடுத்தன. இரண்டாவது நாளான இன்று கர்நாடக அணி இரண்டாவது இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தமிழக அணி தரப்பில் விக்னேஷ் 4 விக்கெட்டுகளையும், நடராஜன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 87 ரன்கள் என்ற வெற்றி இலக்கை தமிழக அணி 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் எட்டியது. தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் விளாசினார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய கருண்நாயர், ராகுல் ஆகியோர் கர்நாடக அணியில் இடம்பெற்றிருந்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close