[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

உங்களுக்கு தெரியுமா?: கோஹினூர் வைரம்

history-of-kohinoor-diamond

கோஹினூர் வைரம் குறித்து அறிந்துள்ள நம்மில் பலருக்கும் அதன் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆந்திர மாநிலத்தின் குண்டூர் அருகே உள்ள கொல்லூர் எனும் கிராமத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்டதாக நம்பப்படும் கோஹினூர் வைரம், 105 கேரட் (21.6 கிராம்) எடை கொண்டது. கோஹினூர் என்ற சொல்லுக்கு பாரசீக மொழியில் மலை அளவு ஒளி என்று பொருள்.

இதுகுறித்த வரலாறு தெளிவாக இல்லை என்றாலும், பண்டைய சமஸ்கிருத நூலான சமயந்தகாவில் உள்ள குறிப்புகளின்படி, இது ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானதாக நம்பப்படுகிறது. இந்த வைரம் பல கைகள் மாறி 1793-ல் பாரசீக மன்னன் நாதிர்ஷா கைக்குப் போனது. அவரே இந்த வைரத்துக்கு கோஹினூர் வைரம் என்று பெயரிட்டார்.

டெல்லியைச் சூறையாடியபோது இந்த வைரத்தை அவர், அக்பரின் வாரிசுகளிடமிருந்து அபகரித்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட ரஞ்சித் சிங் கைகளுக்குச் சென்றது. வணிகம் செய்ய வந்து காலனி ஆதிக்காமாக இந்தியாவை மாற்றிய கிழக்கிந்தியக் கம்பெனியின் சர்.ஜான் லாரன்ஸ் இதனைக் கைப்பற்றினார்.

கோஹினூர் வைரத்தின் மதிப்பையும், வசீகரத்தையும் கண்ட அவர், அதனை இங்கிலாந்து அரச குடும்பத்தினருக்கு பரிசளித்தார். இதையடுத்து, கோஹினூர் வைரம் இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்டது. அதுமுதல் இங்கிலாந்து அரச குடும்பத்தின் நிரந்தர சொத்தாகவே மாறிவிட்ட கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது.

மேலும், கோஹினூர் வைரம் பாகிஸ்தானுக்கே சொந்தம் என்றும், அதனை இங்கிலாந்து அரசிடம் இருந்து திரும்பப்பெற வேண்டும் என்று லாகூரில் சமீபத்தில் வழக்குத் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close