[X] Close
JUST IN
  • BREAKING-NEWS களத்தில் இறங்கியபோது உறுதியளித்தபடி தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது; திமுகவின் வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கு நன்றி -மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளிவந்துள்ளது; இரண்டு தேர்தல்களிலும் நாம் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெற்று தந்துள்ள மக்களுக்கு நன்றி - ஸ்டாலின்
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்; மோடி அரசு ஜனநாயக கொள்கைகளை காக்கும் என நம்புகிறேன் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கர்நாடக எம்எல்ஏக்கள், அமைச்சர்களுடன் நாளை முதல்வர் குமாரசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS ஈரோடு மக்களவை தொகுதி மதிமுக வேட்பாளர் கணேச மூர்த்தி 2,10,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS ட்விட்டரில் இருந்து தான் காவலாளி நீக்கப்பட்டுள்ளது; என் மனதளவில் காவலாளியாகவே இருக்கிறேன் - தனது ட்விட்டர் பக்கத்தில் சவுகிதார் (காவலாளி) என இருந்ததை நீக்கியதற்கு பிரதமர் மோடி விளக்கம்
  • BREAKING-NEWS தஞ்சை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் பழனிமாணிக்கம், தமாகாவின் என்.ஆர்.நடராஜனை 3,63,047 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்

2016: ஒருதலைக் காதல் கொலைகள்

one-side-love-makes-more-murder-in-2016

முன்பெல்லாம் தன்னைக் காதலிக்காத பெண்கள் மீது ஆத்திரப்படும் பெண்கள் ஆசிட் வீசும் சம்பவங்கள் நடந்தன. அதன்பிறகு அந்த வக்கிரம் கொலை செய்யுமளவுக்கு வளர்ந்துள்ளது. ஒரு தலைக்காதலால் நிகழ்ந்த கொலைகளில் கடந்த ஆண்டில் பிரதானமாகப் பேசப்பட்டது பொறியாளர் சுவாதி கொலைதான். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24 ஆம் தேதி அவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் செங்கோட்டை மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். ஒரு தலைக்காதலால் அவர் கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டாலும் அது உண்மை இல்லை என்ற சர்ச்சைகளும் கிளம்பின. கடைசியில் ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டு, அதுவும் சர்ச்சைக்குள்ளானது.

ஜூன் 27- ஆம் தேதி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வினுப்பிரியா காதலால் தற்கொலை செய்துகொண்டார். சுரேஷ் என்பவர் அவரது காதலை ஏற்று கொள்ளாததால் வினுப்பிரியாவின் புகைப்படத்தை ‘மார்பிங்’ செய்து பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். அதைக்கண்ட வினுப்பிரியா அவமானத்தில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியானது. இந்த கோர சம்பவத்திற்கும் காரணம் ஒருதலை காதல் தான் என கூறப்பட்டது

இதையடுத்து ஜூலை மாதம் 12 ஆம் வகுப்பு மாணவி நவீனாவை விழுப்புரத்தை சேர்ந்த செந்தில் என்ற இளைஞர் தன்னை காதலிக்க கூறி மிரட்டியுள்ளார். செந்திலின் காதலை நவீனா ஏற்க மறுத்துவிட்டதால், தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டு, நவீனா மீதும் தீ வைத்துள்ளார். இதில் செந்தில் மற்றும் ஒரு பாவமும் அறியாத மாணவி நவீனாவும் தீயிக்கு இரையாகின.

ஆகஸ்ட் 30 ஆம் தேதி கரூரில் கல்லூரி மாணவி சோனாலியை, அதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவன் உதயகுமார் வகுப்பறையில் நுழைந்து கட்டையால் அடித்து கொலை செய்தார். இந்த கொலைக்குக் காரணமும் ஒருதாலைக் காதல்தான் என கூறப்பட்டுள்ளது.

மாணவிகளுக்கு நிகழும் கொடுமைகள் ஆசிரியர்களையும் விட்டு வைக்க வில்லை ஆகஸ்ட் 31 ஆம் தேதி தூத்துக்குடியில் ஆசிரியை பிரான்சினாவை, சீகன் கோமஸ் என்பவர் சர்ச் வளாகத்தில் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார்.

அதேநாளில் திருச்சியில் காதலை ஏற்றுக் கொள்ளாததால் மோனிஷா என்ற கல்லூரி மாணவியை, பாலமுருகன் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதேபோன்று புதுச்சேரியில் ரோஸ்லின் என்ற கல்லூரி மாணவி எழிலரசன் என்பவரின் காதலை ஏற்றுக்கொள்ளாததால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்

இதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்த தன்யா என்பவரை கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சாகீர், வீட்டில் தனியாக இருந்த தன்யாவை தன்னை காதலிக்கவில்லை என்ற விரக்தியால், கத்தியால் சராமாரியாக குத்தி படுகொலை செய்துள்ளார்.

இதையடுத்து, சென்னையில் சோனியா என்ற இளம் பெண்ணை வினோத் என்ற இளைஞர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். காதலை ஏற்க மறுத்த சோனியாவை பேருந்து நிலையத்தில் கழுத்தறுத்து கொலை செய்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close