[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

அக்டோபர் 06: பரமசிவ சுப்பராயன் மறைந்த தினம்

p-subbarayan-death-anniversary

தமிழகத்தில் முதன்முதலாக அரசாங்க வேலைகளில் தலித்துகளுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு பெற்றுத் தந்த பரமசிவ சுப்பராயன் இதே தினத்தில் தான் மறைந்தார்.

1889-ல் அப்போது சேலம் மாவட்டத்தில் இருந்த போச்சம்பாளையத்தில் பிறந்தார் சுப்பராயன். சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், அயர்லாந்து டப்ளின் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றார். 1918-ல் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரானார்.

ஆரம்ப காலத்தில் நீதிக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்தாலும், பின்னர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரிவான சுயாட்சி கட்சிக்கு மாறினார். 1926-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, சென்னை மாகாணத்தின் முதல்வரானார்.

1927-ல் இரட்டை ஆட்சி முறையின் நிறை குறைகளை ஆராய சைமன் குழுவை சென்னைக்கு அனுப்பியது ஆங்கில அரசு. அதை எதிர்த்து அமைச்சரவையில் பெரும்பாலானோர் குழப்பம் ஏற்படுத்த, சுப்பராயன் பதவி விலகினார். பின்னர், நீதிக்கட்சியினரின் ஆதரவால் முதல்வராக 1930-வரை தொடர்ந்தார். தன் பதவிக் காலத்தில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். இதன்படி அரசு வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளில் பன்னிரெண்டில் ஐந்து பங்கு (5/12) பிராமணர் அல்லாதோருக்கு ஒதுக்கப்பட்டது.

தமிழ்நாடு அரிஜன் சேவா சங்கத்தின் தலைவரானார். 1930-களில் சேலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினார். இந்தியா விடுதலைக்குப் பின்னர் 1949-வரை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டார். 1962-ல் மகாராஷ்டிரத்தின் ஆளுநராகப் பதவி வகித்தபோதே அக்டோபர் 6-ல் காலமானார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close