தனது முன்னாள் வாழ்க்கை பார்ட்னரின் வங்கிக்கணக்கை சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து அனுமதியின்றி இயக்கியதாக, விண்வெளி வீராங்கனை மீது புகார் எழுந்துள்ளது.
விண்வெளியில் அமெரிக்கா, கனடா, ஜப்பான், ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்கியிருந்து விண்வெளி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த வீராங்கனை, அன்னே மெக்லைன் (Anne McClain) என்பவர் 6 மாதம் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வில் ஈடுபட்டார். கடந்த ஜூன் மாதம் இந்தியா திரும்பினார்.
இந்நிலையில் இவர் விண்வெளியில் இருந்தபோது அங்கிருந்தே குற்றச் செயலில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. இவர் தனது முன்னாள், தன் பாலின பார்ட்னர் சம்மர் வுடனுக்குச் சொந்தமான வங்கி கணக்கை, அவர் அனுமதியில்லாமல் அங்கிருந்தே கையாண்டாராம். இதுதொடர்பாக அவர் புகார் அளித்தார். இதையடுத்து நாசா அவரிடம் விசாரணை நடத்த இருக்கிறது.