[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரட்டை இலையை மீண்டும் மீட்போம் என்ற தினகரனின் பகல் கனவு பலிக்காது - அமைச்சர் தங்கமணி
  • BREAKING-NEWS சோதனையான காலத்தில்தான் தேர்தலில் கட்டாயம் போட்டியிட வேண்டும்: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS அதிமுகவுக்கு சின்னம் கிடைத்துவிட்டதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்கும் என கூற முடியாது: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: துரைமுருகன்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும்: கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன்: மதுசூதனன்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு: காதர் மொகிதீன்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் விசிகவின் நிலைப்பாடு குறித்து 2 நாளில் முடிவு அறிவிப்பு- திருமாவளவன்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் யார் என்பது பற்றி தலைமை முடிவெடுக்கும்- கனிமொழி
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும்: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது
அறிவியல் & தொழில்நுட்பம் 29 Aug, 2017 07:46 AM

31ம் தேதி விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் 

pslv-rocket-launch-countdown-starts-tomorrow

பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் 31-ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 29 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நாளை தொடங்குகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 7 செயற்கைகோள்களை திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதில் முதலில் செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுள் காலம் நிறைவடைய இருப்பதை தொடர்ந்து, புதிதாக 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.

இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் வருகிற 31-ந் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆயத்தப்பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இறுதிகட்ட பணியான 29 மணிநேர ‘கவுண்ட்டவுன்’ நாளை பகல் 1.59 மணிக்கு தொடங்கி 31-ந் தேதி மாலை 6.59 மணிக்கு நிறைவடைந்த உடன் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. தற்போது ராக்கெட்டின் பாகங்கள் பொருத்தப்பட்டு, எரிபொருள் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதன் மூலம் இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். 320 டன் எடையும் 44.4 மீட்டர் உயரமும் கொண்ட ராக்கெட்டில் அனுப்பப்படும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் இந்த செயற்கைகோள் நிலை நிறுத்தப்படுகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close