[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

விஜயகாந்த் மீதான ரூ.500 கோடி குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா?: எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் சந்திரகுமாருக்கு தேமுதிக சவால்

dmdk-asks-proof-for-alleges-aganist-vijayakanth

தேமுதிக அறக்கட்டளைக்கு 500 கோடி ரூபாய் வந்தது என்று நிரூபிக்க முடியுமா என பார்த்திபன் மற்றும் சந்திரகுமாருக்கு தேமுதிக பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன் சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தேமுதிகவிலிருந்து விலகிச் சென்ற சந்திரகுமாரும், பார்த்திபனும் திமுகவின் துண்டுதலின்பேரில் அவதூறு பரப்புவதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

தேமுதிக கட்சி பற்றியும், அதன் தலைவர் விஜயகாந்த் பற்றியும் அவதூறு பரப்பினால், தேமுதிகவால் நீங்கள் பெற்ற ஆதாயங்களை ஆதாரப்பூர்வமாக வெளியிடுவோம் என்றும், பொய்யான செய்திகளை பரப்புவதற்கு உங்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏ.ஆர்.இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கட்சியின் வரவு, செலவுக் கணக்குகளை முறையாக வரிமான வரி கணக்கிலும், பொதுக்குழுவிலும், தேர்தல் ஆணையத்திலும் சமர்ப்பித்து வருகிறோம் என்றும், தேமுதிக பொருளாளர் என்ற முறையில் தேமுதிக கட்சிக் கணக்கையும், அறக்கட்டளை கணக்கையும் தெளிவுபடுத்த தாம் தயார் என்றும் இளங்கோவன் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close