[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வரும்காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு பாஜக அரசு பாதுகாப்பாக இருக்கும் என மோடி பேசியது ஆறுதல்- திருமாவளவன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு

election-commission-symbol-allocated-gift-box-symbol-for-ammk-candidates-in-4-assembly-constituency-by-election

தமிழகத்தில் நடைபெற இருக்கும் நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 

மக்களவை மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என அமமுக கோரிக்கை விடுத்திருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அமமுக கோரிக்கையை நிராகரித்தது. ஆனால் ஏதேனும் ஒரு பொதுச்சின்னத்தை அமமுகவிற்கு வழங்க தேர்தல் ஆணையத்தை பரிந்துரை செய்தது. இதையடுத்து பரிசுப்பெட்டகம் சின்னம் அக்கட்சிக்கு வழங்கப்பட்டது. அந்தச் சின்னத்திலேயே அக்கட்சி மக்களவை மற்றும் 18 தொகுதிகள் இடைத்தேர்தலை சந்தித்தது.

இதனையடுத்து, தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மே மாதம் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பரிசுப் பெட்டகம் சின்னத்தை மீண்டும் ஒதுக்கக்கோரி டிடிவி தினகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 

      

இந்நிலையில், நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. நான்கு தொகுதிகளிலும் மே 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close