[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

ஒரே நிதியாண்டில் 800% அதிகரித்த திமுக வருமானம்

dmk-income-sees-800-jump-in-a-year

ஒரே நிதியாண்டில் திமுகவின் வருமானம் 800 சதவீதம் அதிகரித்தது தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அரசியல் கட்சிகள் தங்கள் வருமான விவரங்களை தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்கும். அந்த விவரங்களின் அடிப்படையில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் எனும் என்ஜிஓ, மாநில அரசியல் கட்சிகளின் வருமான விவரங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி, கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் திமுக ரூ.35.748 கோடி வருமானத்தை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் திமுகவின் வருமானம் வெறும் 3.78 கோடியாக இருந்த நிலையில் அதுவே 2017-18-ஆம் நிதியாண்டில் 35.74 கோடியாக உயர்ந்துள்ளது. இது 845.71 சதவீத உயர்வு ஆகும்.

மாநில கட்சிகளின் வருமான பட்டியல்களில் சமாஜ்வாதி கட்சி முதலிடத்தில் உள்ளது. 2017-18 ஆம் நிதியாண்டில் அக்கட்சியின் வருமானம் ரூ.47.19 கோடியாக இருந்தது. இதற்கு அடுத்தப்படியாக திமுகதான் உள்ளது. அதேசமயம் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக 2017-18-ஆம் நிதியாண்டில் ரூ.12.72 கோடி வருமானம் பெற்றது தெரியவந்துள்ளது. 2016-17-ல் அதிமுக பெற்ற வருமானம் ரூபாய் 48.78 கோடியாக இருந்த நிலையில் கடந்த நிதியாண்டில் அதிமுகவின் வருமானம் 74 சதவீதம் சரிவு கண்டுள்ளது.

கடந்த 2017-18 ஆம் நிதியாண்டில் 37 மாநில கட்சிகளின் மொத்த வருமானம் ரூ.237.27 கோடியாகும். இவற்றில் முதல் மூன்று இடங்களில் உள்ள கட்சிகளின் (சமாஜ்வாதி, திமுக, டிஆர்எஸ்) மொத்த வருமானம் 110.21 கோடி ஆகும். அதேசமயம் 2017-18-ஆம் நிதியாண்டில் திமுக செலவு செய்துள்ள தொகை ரூ.27.47 கோடி ஆகும். இதிலும் சமாஜ்வாதி கட்சி தான் முதலிடத்தில் உள்ளது. சமாஜ்வாதி கட்சி 207-18-ஆம் நிதியாண்டில் மொத்தமாக செலவு செய்துள்ள தொகை ரூ.34.53 கோடி ஆகும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close