[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய மாநில ஆட்சியில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பில் இருப்போர் முகிலனை மீட்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் - திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் 25ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு விநியோகம் - திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன்
  • BREAKING-NEWS திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயிரிழப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“அதிமுகவில் பாஜக மூக்கை நுழைப்பது தவறு ”- தம்பிதுரை தர்மயுத்தம்

admk-mp-thambidurai-raise-the-question-to-bjp-why-the-bjp-s-enter-in-admk-parties-matter

அதிமுகவை செயல்படாத கட்சி, ஊழல் செய்யும் கட்சி என பாஜகவினர் விமர்சனம் செய்யும் போது நாங்கள் மவுனமாக இருக்க வேண்டுமா? என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, கூட்டணி என்பது தேர்தல் அறிவித்த பிறகு தான் பேசுவோம். அதிமுக தற்போது வரை தனித்தே செயல்படுவதாகவும் மத்திய அரசுடன் அதிமுக நட்புடன் இருந்தாலும், தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்யப்படாததால் மத்திய அரசின் தவறை சுட்டிக்காட்டி வருகிறோம் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

Related image

மேலும் தமிழகத்தின் நலனுக்காக போராடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது ஒரு தேசியக் கட்சி கூட அதிமுகவிற்கு ஆதரவாக வாய்த்திறக்கவில்லை. இதனால் தான் ஆதங்கப்படுவதாக தம்பிதுரை தெரிவித்துள்ளார். அதிமுகவை வளர்ப்பதில் விருப்பமே தவிர, மற்ற கட்சிகளை வளர்க்க வேண்டிய அவசியமில்லை.

Related image

தம்பிதுரையின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து என கூறும் அளவுக்கு தமிழிசைக்கு அதிகாரம் தந்தது யார் எனவும் தம்பிதுரை கேள்வி எழுப்பினார். அதிமுகவில் பாஜக மூக்கை நுழைப்பது தவறு எனவும் அவர்களின் கட்சியில் நாங்கள் மூக்கை நுழைப்பது தவறு எனவும் கூறிய தம்பிதுரை, தமிழக பாஜகவினர் அவர்களின் கட்சியை வளர்க்க ஏதேதோ பேசிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

Image result for தம்பிதுரை

இதனையடுத்து தமிழகத்தில் அதிமுக செயல்படாத கட்சி எனவும் ஊழல் கட்சி என பாஜக சொல்வதை கண்டு நாங்கள் மவுனமாக இருக்க வேண்டுமா என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அதிமுகவை எதிர்த்து யார் கூறினாலும் நான் எதிர்த்து குரல் கொடுப்பேன் என்றும் கோடநாடு விவகாரம் என்பது தேர்தல் நேரத்தில் புனையப்பட்ட வழக்குகள் எனவும் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close