[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

“கூட்டணி கட்சிகள் விரும்பினால் பிரதமராகத் ‌தயார்” - ராகுல் காந்தி

rahul-gandhi-if-allies-want-i-will-surely-want-to-be-the-prime-minister

கூட்டணிக் கட்சிகள் விரும்பினால் பிரதமராக பதவியேற்கத் தயார் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டின் தலைமைப் பண்புக்கான மாநாட்டில் ராகுல் பங்கேற்றுப் பேசினார். பாரதிய ஜனதா கட்சியை தேர்தலில் தோற்கடி‌க்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவதே முதல் கட்டம் என்ற ராகுல், தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்க வேண்டும் என முடிவு செய்வது இரண்டாவது நிலை என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஆவது குறித்து ராகுல் காந்தி பேசுவது இது முதல் முறை அல்ல. தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் இதே கருத்தினை வெளிப்படுத்தி வருகின்றார். கர்நாடக தேர்தலின் போது பேசுகையில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றால் நிச்சயம் பிரதமர் ஆவேன் என ராகுல் காந்தி கூறியிருந்தார். அதேபோல், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மாணவர்கள் மத்தியில் பேசிய போது இந்த கருத்தினை தெரிவித்தார்.

மேலும், மாயாவது தனித்து போட்டியிடுவது குறித்து பேசுகையில், “கூட்டணி என்பது மாநிலங்கள் மற்றும் மத்தியில் வெவ்வேறாக இருக்கும். மக்களவை தேர்தலில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் ஒன்றாக கைகோர்க்கும். அதற்கான அறிகுறிகள் உள்ளன” என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close