[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

கருணாநிதி விரைவில் தனது குரலில் நன்றி தெரிவிப்பார் - மு.க.ஸ்டாலின்

stalin-thanked-pm-and-others-on-enquiring-about-dmk-chief-karunanidhi-health-status

கருணாநிதி விரைவில் நலம்பெற்று தனது குரலில் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பார் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. அதில், திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கருணாநிதியின் உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. வீட்டிலேயே அதற்கான மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் கருணாநிதி இல்லமான கோபாலபுரத்துக்கு விரைந்து ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

இதனையடுத்து இன்று பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் ஸ்டாலினை தொடர்புக் கொண்டு கருணாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் " கருணாநிதி உடல் நலம் குறித்து கேட்டறிந்த குடியரசுத் தலைவர், பிரதமருக்கு நன்றி. என்னை தொடர்பு கொண்டு திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி. அனைவரின் அக்கறையும் வாழ்த்துகளும் அவரை விரைவில் குண்மடைய செய்யும். கருணாநிதிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது; விரைவில் நலம் பெற்று தனது குரலில் நன்றி தெரிவிப்பார்" என தெரிவித்துள்ளார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close