[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு

சீமானுக்கு ஜாமின் - உயர்நீதிமன்றம் உத்தரவு

the-high-court-give-bail-for-seeman

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட ஆறு பேரை ஜூன் 4-ம் தேதி வரை கைது செய்ய கூடாது என திருச்சி காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை இடைகாலதடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் கடந்த 19 ஆம் தேதி மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் சீமான் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் 
" கடந்த 19 ஆம் தேதி,திருச்சி விமான நிலையம் வந்த போது தன்னை வரவேற்க வந்த நாம் தமிழர் கட்சியினருக்கும், வைகோவை வரவேற்க வந்த மதிமுக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது ; அதில் 8 பேர் பலத்த காயமடைந்த நிலையில் இரு தரப்பினரும் பரஸ்பரம், விமான நிலையத்தில் புகாரளித்தனர். சீமான் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடக்கும் போது அந்த பகுதியில் தான் இல்லை என்பதால் கைது செய்வதில் இருந்து முன்ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த மனு இன்று நீதிபதி கிருஷ்ணவள்ளி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட ஆறு பேரை ஜூன் 4 ஆம் தேதி வரை கைது செய்ய கூடாது என நீதிபதி திருச்சி காவல்துறைக்கு அறிவுறுத்தினார். மேலும் வழக்கு விசாரணையை  ஜூன் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close