[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 62ஆவது படத்தின் பூஜை நாளை நடைபெறுகிறது
 • BREAKING-NEWS நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல; மோடிக்கு எதிரானவன்: பிரகாஷ் ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி இருந்திருக்க வேண்டும் - சீமான்
 • BREAKING-NEWS வைரமுத்துவை காரணம் காட்டி தமிழகத்திற்குள் கொல்லைப்புறமாக வர நினைத்தால் வர முடியாது - பாரதிராஜா
 • BREAKING-NEWS ஹெச். ராஜாவும், தமிழிசையும் இணைந்து மெர்சல் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டனர்- நடிகர் விஷால்
 • BREAKING-NEWS நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் சர்ச்சை தேவையற்றது- ஓ. பன்னீர் செல்வம்
 • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
 • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
அரசியல் 08 Jan, 2018 10:43 AM

வெளிநடப்பு ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்!

mk-stalin-explains-why-he-walks-out-from-assembly

தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கமளித்தார்.

தமிழக சட்டப்பேரவை இன்றுகாலை கூடியது. இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் தமிழில் வணக்கம் தெரிவித்து ஆளுநர் உரையாற்ற தொடங்கினார். ஆளுநர் உரையின் போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை பொறுமையாக இருக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஏன் வெளிநடப்பு செய்தோம் என்பது பற்றி செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

இந்திய தேர்தல் ஆணையம், இந்த ஆட்சிக்கு 111 உறுப்பினர்கள்தான் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. மைனாரிட்டி ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியின் மெஜாரிட்டியை நிரூபிக்க முறையாக ஆளுநர் உத்தரவிட வேண்டும். ஆனால், அதைப் பற்றிக் கவலைப்படாமல் அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கிற உரையை அவர் படிப்பது என்பது ஜனநாயகத்துக்கு விரோதமாக அமைந்திருக்கிறது. அது மட்டுமல்ல, மாநில சுயாட்சிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் புரோகித், ஆய்வு பணி என்ற பெயரில் பல மாவட்டங்களுக்கு சென்று அந்த பணிகளில் ஈடுபடுவது என்பது ஜனநாயகத்துக்கும் அரசியல் சட்டத்துக்கும் விரோதமாக அமைந்திருக்கிறது. அதை கைகட்டி, வாய் பொத்தி, இந்த மைனாரிட்டி ஆட்சியாக இருக்கிற இந்த குதிரை பேர ஆட்சி, வேடிக்கைப் பார்ப்பது மட்டுமல்ல, அதை வரவேற்று பாராட்டிக்கொண்டிருப்பது என்பது உள்ளபடியே வேதனைக்குரிய ஒன்று. அதே நேரம் தமிழகத்தில் நிதிநிர்வாகம் முடங்கி போய் இருக்கிறது. தொழில் வளர்ச்சி கடைசி இடத்துக்கு சென்றிருக்கிறது. அண்மையில் போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களை அழைத்து முதலமைச்சர் பேச்சுநடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால், முதலமைச்சர் அவர்களை அழைத்து பேசவில்லை. இதையெல்லாம் அடிப்படையாக வைத்துதான் வைத்துதான் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

இவ்வாறு கூறினர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close