[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு
  • BREAKING-NEWS கடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS அதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்

பாஜக வேட்பாளராக கரு.நாகராஜன் அறிவிப்பு

karu-nagarajan-announced-as-bjp-candidate-in-rk-nagar-by-election

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக கரு.நாகராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருது கணேஷும்  போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் திமுகவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துவிட்டன. இதனிடையே, பிரபலமான வேட்பாளர் ஒருவரை ஆர்.கே.நகர் தேர்தலில் நிறுத்துவோம் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பாஜக மாநில செயலாளராக பொறுப்பு வகித்து வரும் கரு.நகராஜன் ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கமலாயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேட்பாளர் கரு.நாகராஜனை தமிழிசை அறிமுகம் செய்து வைத்தார். கடந்த முறை நிறுத்தப்பட்ட இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு உடல்நலக்குறைவு என்பதால், புதிய வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.

சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி ஆரம்பித்த போது, கட்சியின் பொதுச் செயலாளராக கரு.நாகராஜன் பணியாற்றினார். பின் 2016ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து பிரிந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close