[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

வறட்சி, வெள்ளத்திலும் அரசு சிறப்பாக செயல்படுகிறது: முதலமைச்சர் பழனிசாமி

cm-palanisamy-said-about-dmk-review-in-nellai-mgr-100th-anniversary-function

வறட்சியிலும், மழை வெள்ளத்திலும் அரசு சிறப்பாக பணியாற்றி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

நெல்லையில் தமிழக அரசு சார்பாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவின் போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தில் ரூ.300 கோடி செலவில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். தடுப்பணைகள் மூலம் சேமிக்கப்படும் தண்ணீர், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய அவர், 3 ஆண்டுகளுக்குள் தமிழகத்தின் பல்வேறு ஆறுகளுக்கு இடையே தடுப்பணைகள் கட்டப்படும் என்றும், அதற்காக ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சியிலும், வெள்ளத்திலும் அரசு சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் அரசை குறை கூறுபவர்கள் குறை கூறிக்கொண்டே தான் இருப்பார்கள் என்றும், குறிப்பாக திமுக தனது இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக அரசைக் குறை கூறுவதாகவும் அவர் விமர்சித்தார். 
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close