[X] Close
JUST IN
 • BREAKING-NEWS இணையதளத்தில் திருட்டுத்தனமாக படங்களை யாரும் பார்க்க வேண்டாம்; திரையரங்கில் பார்க்க வேண்டும் - விஷால்
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளித்து படிகாயமடைந்த இசக்கிமுத்துவை சந்தித்து ஆறுதல் கூறினார் திருமாவளவன்
 • BREAKING-NEWS பகுத்தறிவு என்று கூறி தமிழகத்தில் அடிப்படை அறிவை மழுங்கடித்துவிட்டார்கள்: ஹெச். ராஜா
 • BREAKING-NEWS பொருளாதார பிரச்னை குறித்து பேசுவோரை மதரீதியில் அடையாளப்படுத்துவது மோசமானது: கனிமொழி எம்.பி
 • BREAKING-NEWS சென்னையில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச். ராஜா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகார வழக்கில் விசாரணையை அக்.30ம் தேதிக்கு ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தவில்லை: ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு விளக்கம்
 • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: விராட் கோலி தலைமையில் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும்: திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு; 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி
அரசியல் 07 Oct, 2017 07:26 PM

வேலையில்லா திண்டாட்டம் ஒரு நல்ல அறிகுறி: சொல்கிறார் பியூஷ் கோயல்

piyush-goyal-says-job-losses-is-a-good-sign-for-economy-heres-a-reality-check

வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், வேலையிழப்பு பொருளாதாரத்திற்கு நல்ல அறிகுறி என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் கடந்த மூன்றாண்டு காலமாக வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல சில தொழில் நிறுவனங்களே இந்த விமர்சனத்தை முன் வைத்துள்ளது. குறிப்பாக ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையால் சிறு மற்றும் குறு தொழில்கள் முற்றிலும் முடங்கியுள்ளதாக பொருளாதார ஆலோசகர்கள் கூறி வருகின்றனர். 

இதனிடையே, உலகப் பொருளாதார அமைப்பு சார்பில் டெல்லியில் இந்தியப் பொருளாதாரம் குறித்த மூன்று நாள் மாநாடு அக்டோபர் 4 முதல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் சேர்மன் சுனில் மிட்டல் பேசுகையில், “இந்தியாவின் மிகப்பெரிய 200 தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இல்லை. இதனால் பல லட்சக் கணக்கானோர் பாதிக்கப்படுவர். சிறிய மற்றும் குறுந்தொழில் செய்பவர்களுக்கு எளிதில் வங்கிக் கடன் கிடைப்பதில்லை. நாட்டில் உருவாகும் சொத்துக்களின் பங்கு சமுதாயத்தின் எல்லாப் பிரிவினருக்கும் சரியாகப் போய்ச் சேரவில்லை”  என்று கூறினார்.

இதற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் பதில் அளிக்கையில், “இந்திய இளைஞர்கள் இன்று வேலை தேடுபவர்களாக இல்லை. வேலை வாய்ப்பை உருவாக்குபவர்களாக இருக்கிறார்கள். தற்போது நாட்டில் உள்ள ஏராளமான இளைஞர்கள் தொழில் முனைவோராக மாறவிரும்புகிறார்கள். 3டி தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றால் தொழில்துறையில் இருந்து மனித உழைப்பு குறைக்கப்பட்டுள்ளது. அதனால், வேலையிழந்தவர்கள் கடன் பெற்று சிறு தொழில் தொடங்கும் நேரம் இது” என்று தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close