[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS விருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

போயஸ் கார்டனில் ஜெ.வுக்கு சிகிச்சை அளிக்காதது கவலை அளிக்கிறது: தமிழிசை

tamilisai-sad-about-jayalalithaa-treatment

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்படாதது கவலை அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரின் உடல்நிலை என்ன நிலையில் இருந்தது என்பது குறித்த மருத்துவ அறிக்கை புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ளது. அதில், நுரையீரல் தொற்று காரணமாக அவர் உடலில் 100% இருக்கவேண்டிய ஆக்ஸிஜன் அளவு 45% என்ற அபாய நிலையிலேயே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிமிடத்திற்கு சராசரியாக 72 என இருக்க வேண்டிய இதயத்துடிப்பானது 80 ஆக அதிகரித்திருக்கிறது. சர்க்கரை அளவும் கடுமையாக உயர்ந்திருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், “ஆக்ஸிஜன் சிசிக்சை என்பது எளிமையானது. அப்படியிருக்க போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்படாதது கவலை அளிக்கிறது. உடனடியாக ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டால் மூச்சுத் திணறலை தவிர்த்திருக்கலாம். சர்க்கரை அளவு 508 எம்ஜி வரை செல்ல அனுமதிக்கப்பட்டது ஏன்? இந்த அளவிலான அபாயக் கட்டத்திற்கு ஜெயலலிதா கொண்டு செல்லப்பட்டார் என்பது வருத்தமளிக்கிறது. ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிப்புகள் குறித்து ஆரம்ப நிலையிலேயே கண்காணிக்காதது வருத்தம் அளிக்கிறது. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி அதாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் ஜெயலலிதா சரியான மனநிலையிலேயே இருந்தார்” என்றார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close