[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
  • BREAKING-NEWS அப்போலோவில் ஜெயலலிதா இருந்தபோது நான் அவரை பார்க்கவில்லை: வெற்றிவேல்
  • BREAKING-NEWS சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை பிரிவில் மின்கசிவால் தீ விபத்து
  • BREAKING-NEWS விமானப் பயணத்திற்கு இனி அடையாள அட்டை தேவையில்லை..!
  • BREAKING-NEWS திருவள்ளூர் ஆட்சியர், தமிழக வருவாய் துறை செயலாளருக்கு இந்த மாத சம்பளம் வழங்க தடை
  • BREAKING-NEWS குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலம் என்ற இலக்கை நோக்கி அரசு செல்கிறது: நிலோபர் கபில்
  • BREAKING-NEWS கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகள் செப்.28 க்கு பிறகு அமலுக்கு வரும் என ஐசிசி அறிவிப்பு
  • BREAKING-NEWS பா.ஜ.க.வுடன் கைகோர்க்கவும் தயார்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு வெளியூர் செல்ல அக்டோபர் 15 முதல் 17 வரை சிறப்புப் பேருந்துகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS அக்டோபர் 3 ஆம் தேதி முதல் டெல்லி மெட்ரோ ரயில் கட்டணம் ரூ. 10 உயர்த்தப்படுகிறது
  • BREAKING-NEWS மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெனிபாவுக்கு கத்திக்குத்து
  • BREAKING-NEWS மும்பையில் மகனுடன் தூய்மைப்பணியில் ஈடுபட்ட சச்சின் டெண்டுல்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு
  • BREAKING-NEWS அப்போலோவில் ஜெயலலிதாவை பார்த்தோம்: அமைச்சர் செல்லூர் ராஜூ
  • BREAKING-NEWS மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெனிபாவுக்கு கத்திக்குத்து
அரசியல் 11 Sep, 2017 09:53 PM

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடையில்லை: உயர்நீதிமன்றம் 

aiadmk-general-body-meeting-does-not-rest-supreme-court

சென்னையில் நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

முதலமைச்சர் பழனிசாமி அணி சார்பில் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ் அணிகள் நடத்தும் பொதுக்குழுவுக்குத் தடை கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.  வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். மனு தள்ளுபடியானதை எதிர்த்து வெற்றிவேல் மேல்முறையீடு செய்தார்.

மேல்முறையீடு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ் அணிகளின் பொதுக்குழு கூட்டத்திற்குத் தடையில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

அதே சமயத்தில் அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வந்தால் அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் செல்லாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

இது தொடர்பாக முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.   முன்னதாக, ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ் அணிகளின் பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடைவிதிக்கக் கோரி, வழக்கறிஞர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில், இடைக்காலத் தடை விதித்து பெங்களூரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நாளை ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ் அணிகள் சார்பில் நாளை காலை 10 மணியளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close