[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு
  • BREAKING-NEWS 'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ?' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி
  • BREAKING-NEWS தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது
  • BREAKING-NEWS ஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்
  • BREAKING-NEWS அதிமுக சார்பில் யாகம் நடத்தியதால்தான் தமிழகத்தில் நிறைய இடங்களில் மழை பெய்தது - தமிழிசை சவுந்தரராஜன்

மாம்பழ சீசனில் ஒரு மாம்பழ பாயாசம் ! செய்வது எப்படி ? 

how-to-prepare-mango-payasam-recipe

மனிதர்களுக்கு எந்தெந்த காலத்தில் என்னென்ன தேவை என்பதை இயற்கை நன்கு அறிந்து வைத்துள்ளது. நிலவும் இந்த கோடைக்காலத்திற்கேற்ப இயற்கை தந்த அற்புத பரிசுதான்  மாம்பழம். மாம்பழத்தில் வைட்டமின்- ‘சி’ மற்றும் வைட்டமின் - ‘ஏ’ மிக அதிகமாக உள்ளது. இதிலுள்ள வைட்டமின்- ‘சி’, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இதிலிருக்கும் வைட்டமின்- ‘ஏ’, கண்பார்வை குறைபாடுகளை சரி செய்ய உதவும். 

மாம்பழத்தை அளவாக உண்ண வேண்டும். பொதுவாக அளவுக்கதிகமாக மாம்பழத்தை உண்ணும்போது, அது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். ஆண்கள் மாம்பழத்தை அளவாக உண்டால், அது ஆண்மை பெருக்கியாக செயல்படும் ஆற்றல் உள்ளதாக சித்த மருத்துவத்தில் குறிப்புகள் கூறுகிறது. இது மாம்பழ சீசன் என்பதால், சந்தைகளில் குறைவான விலைகளில் கிடைக்கும். அதை அப்படியே சுவைப்பதைவிட கொஞ்சம் வித்தியாசமாக மாம்பழ பாயாசமாக செய்து உண்ணலாம். கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகையின்போது, இந்த மாம்பழ பாயாசம் சிறப்பிடம் பிடித்திருக்கும். சுவையான மாம்பழ பாயாசம் செய்வது எப்படி என்பதை குறித்து விரிவாக பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்:
மாம்பழம் - ஒன்று
வெல்லம் - 250 கிராம் அளவு
சுக்கு - அரைத் தேக்கரண்டி
ஏலக்காய் - ஒரு தேக்கரண்டி
பால் - 2 லிட்டர்
பாஸ்மதி அரிசி - 2 தேக்கரண்டி
முந்திரி - 10
உலர் திராட்சை - 10 
நெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:
1. முதலில் மாம்பழத்தை நன்கு கழுவி தோலுரித்து துருவிக்கொள்ளவும். வாணலியில் பாஸ்மதி அரிசியை லேசாக வறுத்து மிக்சியில் உடைத்துக் கொள்ளவும்.
2. மிக்சி ஜாரில் அரை லிட்டர் பால், துருவிய மாம்பழம், வெல்லம், ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை சேர்த்து நன்கு மை போல அரைத்துக் கொள்ளவும்.
3. ஒரு அடிகனமான பாத்திரத்தில் மீதமிருக்கும் பாலை ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு, அதில் வறுத்த உடைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து வேக வைக்கவும். அரிசி குழைய வெந்ததும், அரைத்து வைத்துள்ள மாம்பழக் கலவையை சேர்க்கவும்.
4. குறைந்தது ஒரு 10 நிமிடம் வரை கொதிக்கவிடவும். மாம்பழக்கலவை சேர்த்தபின் நல்ல வாசனை வரும், அந்த சமயத்தில் நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை சேர்க்கவும். விருப்பப்பட்டால் குங்குமப்பூவை பாலில் கலந்து சேர்க்கவும்.
5. இந்த சுவையான மாம்பழ பாயாசத்தை சூடாகவோ அல்லது ஆற வைத்து குளிர்சாதனப் பெட்டியில் குளிர வைத்து சில்லென்று பரிமாறலாம்.

குறிப்பு:
1. சுவையான மாம்பழ பாயாசத்தை சில்லென்று பரிமாறினால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
2. பசும் பாலுக்கு பதில் இறுதியாக தேங்காய் பாலும் சேர்க்கலாம். தேங்காயை துருவி நெய்யில் வறுத்தும் சேர்க்கலாம்.
3. கோடை காலத்தில் மாங்காயை உப்பு காரம் சேர்த்து அதிகமாக சாப்பிட்டால், உடல் உஷ்ணம் அதிகமாகி தோல் வியாதிகள் வர வாய்ப்புள்ளது. அதற்கு பதிலாக இப்படி மாம்பழ பாயாசமாக உண்ணலாம்.

 

நன்றி: தர்சினி ராம் 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close