[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்
  • BREAKING-NEWS வங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்
  • BREAKING-NEWS திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்

முகம் பார்க்காத காதலரைச் சந்தித்தபோது... அதிர்ச்சியில் முடிந்த ’மிஸ்டு கால்’ ரொமான்ஸ்!

housewife-s-mobile-phone-romance-turned-ugly

முகம் பார்க்காமல் செல்போனில் காதல் செய்த வாலிபர், தனது ’தோழி’யை நேரில் சந்தித்தபோது அதிர்ச்சி அடைந்தார்.

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணம் ஆனவர். எப்போதும் போனிலேயே இருப்பார். இவருக்கு மிஸ்டு கால் மூலம் ஆண் ஒருவர் பழக்கமானார். இருவரும் அடிக்கடி பேசிக்கொண்டனர். இந்தப் பழக்கம் நட்பானது. பிறகு தொடர்ந்த பேச்சு காரணமாக முகம் தெரியாமலேயே காதல் வலையில் விழுந்தார். சுதா மீது அதிக அன்பை பொழிந்தார், அந்த நண்பர். பதிலுக்கு சுதாவும் காதலைக் கொட்ட, ரகசிய காதலின் நெருக்கம் அதிகமானது. 

ஒரு கட்டத்தில், ‘இப்படி போன்லயே பேசிட்டிருந்தா எப்படி? நேர்ல பார்க்கணும்’ என்றார் சுதா. தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தார் காதலர். ஒரு நாள், என் வீட்டில் இந்த தேதியில் ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்றும் அன்று தனது வீட்டுக்கு வருமாறும் அழைத்தார் காதலர். முகவரியையும் அனுப்பினார். அவரது ஊர் கொஞ்சம் தள்ளி இருந்தது. கணவனையே கைவிட்ட காதலுக்கு, தூரம் ஒரு பிரச்னையா?.

கணவனிடம் பொய் சொல்லிவிட்டு ஆண் நண்பரைப் பார்க்கப் போனார் சுதா. சம்மந்தப்பட்ட ஊரில் இறங்கி, வீட்டைத் தேடி சென்றார். வீட்டின் உள்ளே பிளஸ் ஒன் மாணவன் இருந்தான். ‘யாருங்க வேணும்?’ என்று அவன் கேட்க, காதலன் பெயரைச் சொன்னார் சுதா. ’அது நான் தான். நீங்க...?’ என்று மாணவன் கேட்க, சுதா தனது பெயரைச் சொன்னதும் அதிர்ச்சி அடைந்தான். அவன், சுதாவை மாணவி என்ற நினைப்பிலேயே காதலித்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்தப் பெண்ணைக் கண்டு, மாணவன் கூச்சல் போட, அக்கம் பக்கத்தினர் திரண்டனர். பிறகு அவர்களிடம் நடந் ததை சொன்னார் அந்தப் பெண். அவர் கணவரை வரவழைத்த ஊர்க்காரர்கள், அட்வைஸ் செய்து அவருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த மாணவன், தனது அப்பாவின் போன் மூலம் இந்தப் பெண்ணிடம் பழகி வந்தது தெரிய வந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close