[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

ஜார்க்கண்டில் பாஜக-வில் சேர்ந்த 6 எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள்!

bjp-picks-up-6-opposition-mlas-in-jharkhand

ஜார்க்கண்ட் மாநிலத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.எல்.ஏவுமான சுக்தேவ் பகத், மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ மனோஜ் யாதவ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த குணால் சாரங்கி, ஜெய்பிரகாஷ் பாய் படேல், சம்ரா லிண்டா மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ பானு பிரதாப் சாஹி ஆகியோர் நேற்று தத்தமது கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில்  சேர்ந்தனர்.

பாஜகவின் தேசியவாதத்தாலும், நாட்டை வளர்ச்சிப் பாதையிலும் கொண்டு செல்லும் செயலாலும் ஈர்க்கப்பட்டு, அதில் சேர்ந்ததாக சுக்தேவ் பகத் தெரிவித்துள்ளார். இவர்கள் ஆறு பேரும் ராஞ்சியில், முதலமைச்சர் ரகுபர் தாஸ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் பாரதிய ஜனதாவின் பலம் 48ஆக உயர்ந்துள்ளது. அங்கு நவம்பர், டிசம்பர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close